
மதுரை தியாகராஜர் இன்ஜி., கல்லூரி வேதியியல் பேராசிரியர் வாசுதேவன்கண்டுபிடித்த பிளாஸ்டிக் ரோட்டிற்கு, மத்திய அரசு அங்கீகாரம் வழங்கியுள்ளது.
மறு பயன்பாட்டிற்கு பயன்படாத பாலித்தீன் கவர்கள், பிஸ்கட், சாக்லேட்கவர்கள், தெர்மாகோல் போன்றவற்றை மீண்டும் பயன்படுத்தவும், பூமிவெப்பமடைவதை தடுக்கவும், மதுரை தியாகராஜர் இன்ஜி., கல்லூரி பேராசிரியர்வாசுதேவன் ஆராய்ச்சி மேற்கொண்டார். இவற்றை பயன்படுத்தி பிளாஸ்டிக்ரோடு அமைக்க முடிவு செய்தார். கழிவுகளை எரிக்காமல், தொழில் நுட்பத்தைப்பயன்படுத்தி ஜல்லிகளில் கலந்து பிளாஸ்டிக் கோட்டிங் கொடுத்து, அவற்றுடன்தார் சேர்த்து பிளாஸ்டிக் ரோடு அமைத்தார்.
பிளாஸ்டிக் ரோடு: உலகில் முதன்முறையாக இவரது கண்டுபிடிப்பானபிளாஸ்டிக் ரோடு, முதலில் கோவில்பட்டியில் 2002ல் போடப் பட்டது. கிராமவளர்ச்சித் துறை மூலம் தமிழகத்தில் 2000க்கும் அதிகமான கி.மீ., பிளாஸ்டிக்ரோடுகள் போடப்பட்டன. மும்பை, கேரளாவில் ரோடுகள் அமைக்கும் பணிநடக்கிறது.தேசிய மாசு கட்டுப்பாட்டு வாரியம் இவரது ஆராய்ச்சிக்கு 50 ஆயிரம்ரூபாய் நிதி உதவி வழங்கி, பிளாஸ்டிக் ரோடு போடும் வழிமுறைகள் குறித்துஆய்வு செய்ய கேட்டது.
ஆய்வு அறிக்கையை வாசுதேவன் சமர்ப்பித்தார். அது புத்தகமாகவெளியிடப்பட்டது. பிளாஸ்டிக் ரோடுக்கு தியாக ராஜர் இன்ஜி., கல்லூரிக்குமத்திய அரசு காப்புரிமை 2006ல் வழங்கியது.நிதி உதவி: பிளாஸ்டிக் ரோட்டின்தன்மை, தரம், உழைப்பு, ஆயுள், பயன்கள் குறித்து ஆய்வு செய்ய, இரண்டாம்கட்டமாக 15 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டது. ஆய்வு அறிக்கைசமர்ப்பிக்கப்பட்டது. அறிக்கையை ஆய்வு செய்த மாசு கட்டுப்பாட்டு வாரியம்,பிளாஸ்டிக் தார் ரோடுகள் அமைப்பதால் ஏற்படும் நன்மைகள், சாதாரணரோட்டிற்கும், பிளாஸ்டிக் ரோட்டிற்கும் உள்ள வித்தியாசம், செலவுகள் விவரம்அடங்கிய குறிப்புகளை தற்போது புத்தகமாக வெளியிட்டுள்ளது.
இந்த புத்தகங்களை இந்தியா முழுவதிலுமுள்ள அனைத்து உள்ளாட்சிஅமைப்புகள் மற்றும் ரோடுகள் பராமரிப்புத் துறைகளுக்கும் அனுப்பியுள்ளது.அந்த புத்தகத்தில் தற்போது அமைக்கப்பட்டுள்ள பிளாஸ்டிக் ரோடுகள்தரமானதாகவும், நீடித்து உழைக்கக் கூடியது என்றும் குறிப்பிட்டுள்ளது.
அங்கீகாரம்: மத்திய கிராம வளர்ச்சி அமைச்ச கத்தின் தேசிய கிராமப்புறரோடுகள் வளர்ச்சி நிறுவனம், கிராமப்புறங்களில் பிளாஸ்டிக் தார் ரோடுகள்அமைக்க அங்கீகரித்து வழிமுறைகளை வகுத்துக் கொடுத்துள்ளது. அதற்கான"கைடு லைன்' வெளியிட்டுள்ளது. கிராமப்புறங்களில் பிளாஸ்டிக் தார் ரோடுகள்அமைக்க ஏற்பாடு செய்துள்ளது.
பேராசிரியர் வாசுதேவன் கூறியதாவது:மத்திய அரசு அளித்துள்ள கைடு லைன்மிகுந்த மகிழ்ச்சியை அளிக்கிறது. பிளாஸ்டிக் தார் ரோடுகள் நீடித்து உழைக்கும்.சாதாரண தார் ரோட்டைக் காட்டிலும் ஐந்தாண்டுகள் கூடுதல் பலன் தரும்.மழைநீர் ஊடுருவி சாலைகள் பழுதடைவதில்லை. பராமரிப்பு செலவுகள்கிடையாது. இதன் மூலம் அரசுக்கு ஆண்டுக்கு பல கோடி ரூபாய் மிச்சமாகும்.
சுற்றுப்புறச் சூழல் மாசுபடுவது தடுக்கப்படும். தட்பவெட்பநிலையை சீராக்க உதவும். பிளாஸ்டிக் கழிவுகளால் இவ்வுலகிற்கு ஏற்படும் அபாயத்தை நீக்கலாம். எனது முயற்சிக்கு ஒத்துழைப்பு கொடுத்த கல்லூரி நிர்வாகத்துக்கும், தொழில் நுட்பத்தில் உதவியவர்களுக்கும் நன்றி.
பிளாஸ்டிக் தார் ரோடு அமைக்க விரும்புவோர் 0452-2482240 என்றதொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
இவ்வாறு வாசுதேவன் கூறினார்.
0 comments:
கருத்துரையிடுக