லண்டனில், நிறவெறி தாக்குதல் நடத்தப்பட்டதால் 67 வயதான இந்திய முஸ்லிம் மரணமடைந்தார். கோல்கட்டாவை சேர்ந்தவர் இக்ரம் உல் ஹக் (67). கடந்த 1972ல் வேலை தேடி பெல்பாஸ்ட் நகருக்கு சென்றார். அங்கு அவருக்கு திருமணம் நடந்தது. பின், கணவன், மனைவி இருவரும் 1980ம் ஆண்டில் லண்டனில் குடியேறினர்.
அங்கு ஜவுளி நிறுவனத்திலும், பின், உடல் ஊனமுற்றோர் இல்லத்தில் வார்டனாகவும் ஹக் பணியாற்றி வந்தார்.இந்நிலையில், கடந்த ஆக., 31ம் தேதி, ஆசிய மக்கள் அதிகமாக வசிக்கும், தெற்கு லண்டனில் உள்ள மசூதிக்கு தனது பேத்தியுடன் சென்று விட்டு, மீண்டும் தனது வீட்டுக்கு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது, அங்கு வந்த மூன்று பேர் கும்பல், ஹக் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியது. இதில், அவருக்கு படுகாயம் ஏற்பட்டதையடுத்து, மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த 3 வயது சிறுமி மரியன், செய்வதறியாது வீறிட்டபடி இங்கும் அங்கும் ஓடினாள். மசூதிக்குள் ஓடி மூலையில் முடங்கினாள். தாக்குதலில் எக்ராம் படுகாயமடைந்து நினைவிழந்தார். சம்பவம் பற்றி எக்ராமின் மகன் அர்பான் கூறுகையில், "தாத்தா மீது நடந்த தாக்குதலைக் கண்டு மரியன் மனநிலை பாதிக்கப்பட்டுள்ளது. அதிர்ச்சியில் இருந்து மீளமுடியாமல் அடிக்கடி அலறுகிறாள்" என்றார்.
இது குறித்து விசாரணை நடத்தி வரும் "ஸ்காட்லாண்டு யார்டு' போலீசார், குற்றவாளிகள் மீது நிறவெறி தாக்குதல் நடத்தியதாக வழக்கு பதிவு செய்துள்ளனர். ஆனால் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இக்ரம் உல் ஹக் மரணமடைந்தா
0 comments:
கருத்துரையிடுக