வெள்ளி, 11 செப்டம்பர், 2009
கேரளாவில் மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வில் முஸ்லிம் மாணவர்கள் சாதனை !
கேரளாவில் மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வில் முஸ்லிம் மாணவர்கள் குறிப்பிடத்தக்க சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.1000 ரேங்குகளில் டாப் ரேங்குகளை பிடித்தவர்களில் 25 சதவீதத்தினர் முஸ்லிம் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 254 முஸ்லிம் மாணவர்களில் 24 முஸ்லிம் மாணவர்கள் முதல் 100 இடங்களுக்குள் இடம் பெற்றுள்ளனர். முதல் 500 இடங் களில் 131 முஸ்லிம் மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர் என்பது திருப்தி மிகுந்த செய்தியாகும்.
சமீபகால வரலாற்றில் இது மிகவும் குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். கல்வித் துறையில் கேரள முஸ்லிம் மாணவர்கள் குறிப்பாக மலப்புரம் முஸ்லிம் மாணவர்கள் சிறந்து விளங்கிவருவதாக கோழிக் கோடு ஃபரூக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் பேராசியர் யு.முஹம்மது தெரிவித்தார்.27 சதவீத முஸ்லிம் மக்களில் கல்வி முன்னேற்றம் 10 சதவீதம் என்ற அளவில் இருந்தது. தற்போது விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. பயிற்சி வகுப்புகள் அதிகரித்திருப்பதும் ஸ்காலர்ஷிப்புகள் அதிக அளவு பெருகிவருவதும் இந்த மாற்றத்திற்கான காரணமாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இரண்டு மூன்று ஆண்டுகளில் இது ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் என்றும் பேரா.முஹம்மது குறிப்பிடுகிறார்.
மலபார் பகுதி மாணவர்கள் இவ்வாண்டு மருத்துவம் மற்றும் பொறியியல் நுழைவுத் தேர்வுகளில் முன்னிலை வகிக்கின்றனர். கோழிக்கோடு மாவட்ட முஸ்லிம் மாணவர்கள் பொறியியல் நுழைவுத் தேர்வுகளில் முதலிடத்தையும், மருத்துவத்தில் நுழைவுத் தேர்வுகளில் இரண்டாமிடத்தையும் பெற்றுள்ளனர்.மருத்துவ நுழைவுத் தேர்வில் டாப் 1000 ரேங்குகள் பெற்றவர்களில் 146 முஸ்லிம் மாணவர்கள் கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். பொறியியல் நுழைவுத்தேர்வுகளில் டாப் 1000 ரேங்குகளில் 134 இடங்களை கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம் மாணவர்கள் இடம்பெற்றனர்.
மாநில அளவில் மருத்துவ நுழைவுத் தேர்வில் டாப் 1000 ரேங்குகளில் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 138 முஸ்லிம் மாணவர்கள் ரேங்க் பெற்றனர். பொறியியல் நுழைவுத் தேர்வில் டாப் 1000 ரேங்குகளில் 110 இடங்களை மலப்புரம் முஸ்லிம் மாணவர்கள் பெற்றுள்ளனர்.இது நிச்சயம் பாராட்டி ஊக்கப்படுத் தப்பட வேண்டிய ஒன்று என யூனிட்டி ஃபார் சோஷியல் டெவலப்மென்ட்டின் பொதுச் செயலாளர் பரீது பாவாகான் தெரிவித்தார்.
0 comments:
கருத்துரையிடுக