தேர்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தேர்வு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெள்ளி, 19 பிப்ரவரி, 2010
+2 தேர்வில் காப்பியடிக்கும் மாணவர்கள் 2 ஆண்டுகளுக்கு தேர்வு எழுத தடை!
பிளஸ் 2 தேர்வில் காப்பியடிக்கும் மாணவர்கள் 2 ஆண்டுகளுக்கு தேர்வு எழுத முடியாதபடி தடை விதிக்கப்படும். தேர்வு மையங்களில் முறைகேடுகள் நடந்தால் தேர்வு மையத்தின் தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அரசுத் தேர்வுத் துறை அறிவித்துள்ளது.
மார்ச் 1ம் தேதி தொடங்கி 22ம் தேதி வரை பிளஸ் 2 தேர்வு நடக்கிறது. இதற்காக தமிழகம் முழுவதும் 1800 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இவற்றில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தலைமை ஆசிரியர்கள், முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் தேர்வுப் பணியில் ஈடுபடுவார்கள். மேலும் 1200 பறக்கும் படைகள் அமைக்க தேர்வுத் துறை நடவடிக்கை எடுத்துவருகிறது.
இதுகுறித்து தேர்வுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தேர்வில் ஒழுங்கீனங்களை தடுக்க பறக்கும் படை அமைக்கப்படும். ஒவ்வொரு மாவட்டத்திலும் சுமார் 40 பறக்கும் படைகள் அமைக்கப்படுகிறது. இந்த பறக்கும் படையினர் மாவட்டம் முழுவதும் உள்ள தேர்வு மையங்களை கண்காணிப்பார்கள்.
தேர்வு எழுதும் போது துண்டுச் சீட்டு வைத்திருப்பது, அச்சிட்ட புத்தகங்களை வைத்திருப்பது போன்ற ஒழுங்கீனங்களில் ஈடுபடும் மாணவ மாணவியர் ஓராண்டுக்கு தேர்வு எழுத தடை விதிக்கப்படும். மற்ற மாணவர்களின் விடைத்தாளை பார்த்து எழுதினால் 2 ஆண்டுகள் தேர்வு எழுத தடை விதிக்கப்படும். தேர்வுப் பணியில் ஈடுபடும் ஆசிரியர்களிடம் தேர்வு நேரத்திலும் தேர்வு முடிந்து வெளியில் செல்லும்போதும் முறைகேடான செயல்களில் ஈடுபடும் மாணவர்கள், மற்ற மாணவர்களின் விடைத்தாளை வாங்கி எழுதுவது போன்ற செயல்களில் ஈடுபடும் மாணவர்கள் நிரந்தரமாக தேர்வு எழுத முடியாதபடி தடை விதிக்கப்படும். இவர்கள் மீது போலீசார் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும்.
தேர்வு மையங்களில் ஆய்வு செய்யும் போது, தேர்வு நடத்துவதில் முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டால், சம்பந்தப்பட்ட தேர்வு மைய தலைமை ஆசிரியர் மீது நடவடிக்கை எடுக்கப்படும். தனியார் பள்ளிகளாக இருந்தால் தேர்வு மையம் மற்றும் பள்ளியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும். தேர்வு அறைக்குள் கண்காணிப்பாளர், மாணவ மாணவியர் ஆகியோர் செல்போன் எடுத்துச் செல்ல தடைவிதிக்கப்பட்டுள்ளது. பெல்ட், ஷூ, டிஜிட்டல் வாட்ச் போன்றவற்றை தேர்வு அறைக்குள் எடுத்து வரக்கூடாது. தடை செய்யப்பட்ட பொருட்களை மாணவர்கள் கொண்டு வருகிறார்களா என்பதை கண்காணிப்பாளர் சோதனை செய்ய வேண்டும்.
வெள்ளி, 11 செப்டம்பர், 2009
கேரளாவில் மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வில் முஸ்லிம் மாணவர்கள் சாதனை !
கேரளாவில் மருத்துவக் கல்லூரி நுழைவுத் தேர்வில் முஸ்லிம் மாணவர்கள் குறிப்பிடத்தக்க சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.1000 ரேங்குகளில் டாப் ரேங்குகளை பிடித்தவர்களில் 25 சதவீதத்தினர் முஸ்லிம் மாணவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 254 முஸ்லிம் மாணவர்களில் 24 முஸ்லிம் மாணவர்கள் முதல் 100 இடங்களுக்குள் இடம் பெற்றுள்ளனர். முதல் 500 இடங் களில் 131 முஸ்லிம் மாணவர்கள் இடம்பெற்றுள்ளனர் என்பது திருப்தி மிகுந்த செய்தியாகும்.
சமீபகால வரலாற்றில் இது மிகவும் குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். கல்வித் துறையில் கேரள முஸ்லிம் மாணவர்கள் குறிப்பாக மலப்புரம் முஸ்லிம் மாணவர்கள் சிறந்து விளங்கிவருவதாக கோழிக் கோடு ஃபரூக் கல்லூரியின் முன்னாள் முதல்வர் பேராசியர் யு.முஹம்மது தெரிவித்தார்.27 சதவீத முஸ்லிம் மக்களில் கல்வி முன்னேற்றம் 10 சதவீதம் என்ற அளவில் இருந்தது. தற்போது விழிப்புணர்வு ஏற்பட்டிருக்கிறது. பயிற்சி வகுப்புகள் அதிகரித்திருப்பதும் ஸ்காலர்ஷிப்புகள் அதிக அளவு பெருகிவருவதும் இந்த மாற்றத்திற்கான காரணமாக இருக்கலாம் என்றும் கருதப்படுகிறது. இரண்டு மூன்று ஆண்டுகளில் இது ஒரு குறிப்பிடத்தக்க மாற்றம் என்றும் பேரா.முஹம்மது குறிப்பிடுகிறார்.
மலபார் பகுதி மாணவர்கள் இவ்வாண்டு மருத்துவம் மற்றும் பொறியியல் நுழைவுத் தேர்வுகளில் முன்னிலை வகிக்கின்றனர். கோழிக்கோடு மாவட்ட முஸ்லிம் மாணவர்கள் பொறியியல் நுழைவுத் தேர்வுகளில் முதலிடத்தையும், மருத்துவத்தில் நுழைவுத் தேர்வுகளில் இரண்டாமிடத்தையும் பெற்றுள்ளனர்.மருத்துவ நுழைவுத் தேர்வில் டாப் 1000 ரேங்குகள் பெற்றவர்களில் 146 முஸ்லிம் மாணவர்கள் கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள். பொறியியல் நுழைவுத்தேர்வுகளில் டாப் 1000 ரேங்குகளில் 134 இடங்களை கோழிக்கோடு மாவட்டத்தைச் சேர்ந்த முஸ்லிம் மாணவர்கள் இடம்பெற்றனர்.
மாநில அளவில் மருத்துவ நுழைவுத் தேர்வில் டாப் 1000 ரேங்குகளில் மலப்புரம் மாவட்டத்தைச் சேர்ந்த 138 முஸ்லிம் மாணவர்கள் ரேங்க் பெற்றனர். பொறியியல் நுழைவுத் தேர்வில் டாப் 1000 ரேங்குகளில் 110 இடங்களை மலப்புரம் முஸ்லிம் மாணவர்கள் பெற்றுள்ளனர்.இது நிச்சயம் பாராட்டி ஊக்கப்படுத் தப்பட வேண்டிய ஒன்று என யூனிட்டி ஃபார் சோஷியல் டெவலப்மென்ட்டின் பொதுச் செயலாளர் பரீது பாவாகான் தெரிவித்தார்.
செவ்வாய், 8 செப்டம்பர், 2009
சிபிஎஸ்இ 10ம் வகுப்பு-தேர்வு ரத்து, விரும்பினால் எழுதலாம்

விரும்பினால் மட்டுமே சிபிஎஸ்இ 10ம் வகுப்புத் தேர்வை மாணவர்கள் எழுதும் முறை 2010-11 கல்வியாண்டில் அமலாக்கப்படும் என்று மத்திய மனித வளத்துறை அமைச்சர் கபில் சிபல் கூறியுள்ளார்.
இதன்மூலம் அடுத்த கல்வியாண்டு முதல் சிபிஎஸ்இ 10ம் வகுப்பு தேர்வு ரத்து செய்யப்படுகிறது.
Labels:
அரசு,
கபில் சிபல்,
தேர்வு
ஞாயிறு, 30 ஆகஸ்ட், 2009
10ம் வகுப்பு தேர்வு ரத்து இல்லை : கபில் சிபல் விளக்கம்
மாநில அரசுகளின் கல்வி வாரியங்கள் நடத்தும் 10ம் வகுப்பு பொதுத்தேர்வை ரத்து செய்ய சொல்லவில்லை. மாநில அரசுகள் அவற்றின் விருப்பபடி கல்வித் திட்டத்தை வகுத்துக் கொள்ளலாம் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சர் கபில் சிபல் கூறினார். ஒரிசா மாநில தலைநகர் புவனேஸ்வர் அருகில் உள்ள கோரக்புட் என்ற இடத்தில் புதிதாக மத்திய பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டுள்ளது. அதன் தொடக்க விழா நேற்று முன்தினம் நடந்தது. பல்கலைக்கழகத்தை தொடக்கி வைத்தபின் நிருபர்களுக்கு கபில் சிபல் பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது: சமீபத்தில் மத்திய, மாநில கல்வி வாரியங்களின் கூட்டம் டெல்லியில் நடந்தது. அப்போது 10ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்யும் யோசனைக்கு பலர் எதிர்ப்பு தெரிவித்தனர். இருந்த போதிலும் கிரேடு முறையை அமல்படுத்த எதிர்ப்பு இல்லை. எனவே மத்திய பள்ளிக் கல்வி நிறுவனங்களில் 2009&10ம் கல்வி ஆண்டு முதல் கிரேடு முறை அமல்படுத்தப்படும். அதேசமயம் மாநில அரசுகள் நடத்தும் 10ம் வகுப்பு பொதுத் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று மத்திய அரசின் சார்பில் சொல்லவில்லை. மாநில அரசுகள் தங்கள் விருப்பப்படி பாடத் திட்டங்களை தயாரித்து, தேர்வுகளை நடத்தலாம். இவ்வாறு மனித வள மேம்பாட்டு அமைச்சர் கபில் சிபல் கூறினார்.
Labels:
அரசு,
கபில் சிபல்,
தேர்வு
