சனி, 5 செப்டம்பர், 2009

இந்திய கிராமங்களை இணைக்க செயற்கைகோள்-இஸ்ரோ

இந்தியாவில் சுமார் 50 ஆயிரம் கிராமங்கள் எந்த தொலை தொடர்பு வசதியும் இல்லாமல் இருக்கிறது. இந்த குறையை போக்கும் வகையில் இஸ்ரோ புதிய செயற்கோளை வடிவமைத்து வருகிறது. இதன் மூலம் இந்தியாவின் கிராமங்கள் தகவல் தொடர்பு வலையில் இணைக்கப்படும் என்று இஸ்ரோ தலைவர் மாதவன் நாயர் தெரிவித்துள்ளார்.

இது குறித்து கொச்சியில் அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில்,

நமது நாட்டில் 6 லட்சத்துக்கும் மேலான கிராமங்கள் இருக்கிறது. இதில் சுமார் 50 ஆயிரம் கிராமங்கள் தொலை தொடர்பு வசதியில்லாமல் இருக்கிறது.

இந்த கிராமங்களை இணைக்க புதிய செயற்கோள் ஒன்றை வடிவமைத்து வருகிறோம். இது இன்னும் இரண்டரை ஆண்டுகளில் விண்ணில் செலுத்தப்படும்.

சந்திரயான் 1 திட்டத்தில் சில பிரச்சனைகள் இருப்பதை நாங்கள் முன்கூட்டியே கணித்திருந்தேம். இதனால் முக்கிய சோதனைகளை விரைவாகவே முடித்துவிட்டோம். நாங்கள் திட்டமிட்டவற்றில் 95 சதவீத தகவல்களை பெற்று விட்டோம்.

தற்போது அந்த தகவல்கள் குறித்து ஆராய்ந்து வருகிறோம். இதற்கு இன்னும் 6 மாதம் முதல் இரண்டு ஆண்டுகள் வரை ஆகும் என்றார்.


0 comments:

கருத்துரையிடுக