திங்கள், 5 அக்டோபர், 2009

திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் 10 டாக்டர்களுக்கு பன்றிக்காய்ச்சல் உறுதி

திருவனந்தபுரம் அரசு மருத்துவமனையில் 10 டாக்டர்களுக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. திருவனந்தபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை வளாகத்தில் ஸ்ரீஅவிட்டம் திருநாள் மருத்துவமனை உள்ளது. இது பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான சிறப்பு மருத்துவமனை ஆகும். 
இங்கு கடந்த சில தினங்களுக்கு முன் அனுமதிக்கப்பட்டிருந்த ஒரு கர்ப்பிணிக்கு பன்றிக் காய்ச்சல் இருப்பது கண்டு பிடிக்கப்பட்டது. அவரை தனி அறையில் வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இந்நிலையில் பிரசவ வார்டில் பணி புரிந்த 3 ஜூனியர் மருத்துவர்களுக்கு பன்றிக்காய்ச்சல் அறிகுறிகள் இருந்தன. மருத்துவ பரிசோதனையில் அவர்களுக்கு பன்றிக்காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டது. உடனடியாக அவரைகளை வீடுகளுக்கு அனுப்பி அங்கேயே சிகிச்சை வழங்கப்படுகிறது.
இந்நிலையில் அதே மருத்துவமனையில் உள்ள மேலும் 7 டாக்டர்களுக்கும் பன்றிக்காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. கர்ப்பிணியிடம் இருந்து இந்த டாக்டர்களுக்கும் பரவியிருக்கலாம் எனத் தெரிகிறது. மேலும் பன்றிக் காய்ச்சல் பரவாமல் இருக்க தீவிர தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. 

0 comments:

கருத்துரையிடுக