செவ்வாய், 6 அக்டோபர், 2009
ஏப்ரல் முதல் ஜூன் வரை வெளிநாட்டு இந்தியர்கள் அனுப்பியது 63,840 கோடி ஐ.நா. அறிக்கையில் தகவல்
வெளிநாடுவாழ் இந்தியர்கள் அனுப்பும் பணத்தின் மதிப்பு, மொத்த வெளிநாட்டு முதலீட்டைவிட 1.5 மடங்கு அதிகம். நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வெளிநாடுவாழ் இந்தியரின் பணம் மிகவும் உதவுகிறது.இதுபற்றி ஐ.நா. மனிதவள மேம்பாட்டுப் பிரிவு அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:வெளிநாடுவாழ் இந்தியர்கள் தாயகத்துக்கு அனுப்பும் பணத்தை வெறும் ரொக்கத் தொகையாக மட்டும் கருத முடியாது. அது இந்தியக் குடும்பங்களில் பெண்களுக்கு அதிக அதிகாரம் கிடைக்கச் செய்கிறது. படிப்பை இடையே நிறுத்திய சொந்தங்கள், உயர்கல்வி பெறச் செய்கிறது.இந்த நிதி ஆண்டின் முதல் காலாண்டில் தாயகத்துக்கு வெளிநாடுவாழ் இந்தியர்கள் அனுப்பிய தொகை ரூ.63,840 கோடி. இது கடந்த நிதி ஆண்டின் இதே காலத்தில் ரூ.58,560 கோடி. இப்போது 9.4 சதவீதம் உயர்ந்துள்ளது என்று அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.வெளிநாடுகளில் சுமார் 2.5 கோடி முதல் 3 கோடி இந்தியர்கள் வரை பணியாற்றி வருகின்றனர். இவர்களில் பெரும்பாலோர் வளைகுடா நாடுகளில் உள்ளனர்.
Labels:
வெளிநாட்டு
0 comments:
கருத்துரையிடுக