திங்கள், 5 அக்டோபர், 2009

ஆந்திரம்: வெள்ளத்தின் பிடியில் 200 கிராமங்கள்

ஆந்திராவில் கடந்த சில நாட்களாகப் பெய்துவரும் கனமழை காரணமாக மூன்று நகரங்கள் மற்றும் 200க்கும் மேற்பட்ட கிராமங்கள் தொடர்ந்து வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. கிருஷ்ணா மற்றும் துங்கபத்ரா நதிகளில் நீரோட்டம் சற்றுக் குறைந்திருந்தபோதிலும் கர்நூல் மற்றும் மகபூப்நகர் மாவட்ட மக்களின் துயரம் இன்னும் குறைந்தபாடில்லை. இவ்விரு மாவட்டங்களும் வெள்ளப்பெருக்கு காரணமாக கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.
கோண்டு நதியில் நீரோட்டம் அதிகமாக இருப்பதால் கர்நூல் மாவட்டம் நந்தியால் நகரின் பெரும்பாலான பகுதிகள் நீரில் மூழ்கியுள்ளன. வெள்ளம் காரணமாக வீட்டின் கூரைப்பகுதிகளில் சிக்கித் தவிக்கும் மக்களை மீட்க அரசு நிர்வாகம் நடவடிக்கை எடுத்து வருவதாகத் தகவல்கள் தெரிவித்தன.
கர்நூல் நகரம் மற்றும் அதைச்சுற்றியுள்ள பகுதிகளில் இதுவரை 100,000த்துக்கும் அதிகமானோர் வெள்ளப் பகுதிகளிலிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர். வெள்ளம் காரணமாக ஆந்திர மாநிலத்தில் இதுவரை 33 பேர் உயிரிழந்துள்ளதாக அரசு தெரிவித்தாலும், 50க்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத தகவல்கள் தெரிவித்தன.

0 comments:

கருத்துரையிடுக