வியாழன், 8 அக்டோபர், 2009
உலக இஸ்லாமிய மக்கள் தொகை 1.57 பில்லியனாக அதிகரிப்பு
உலக அளவில் இஸ்லாமிய மக்கள் தொகையின் எண்ணிக்கை 1.57 பில்லியனாக அதிகரித்துள்ளதாகவும், இது உலக மக்கள் தொகையில் நான்கில் ஒரு பங்காகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மதம் மற்றும் பொது வாழ்க்கைக்கான அமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கை ஒன்றில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிக்கையில் இஸ்லாமிய மக்கள் தொகை குறித்த சில ஆச்சரியமான தகவல்களும் இடம்பெற்றுள்ளன.
லெபனானை விட ஜெர்மனியில் அதிக இஸ்லாமிய மக்கள் உள்ளனர்.அதேபோன்று சிரியாவை விட சீனாவில் அதிக இஸ்லாமிய மக்கள் உள்ளனர். மேலும் ஜோர்டான் மற்றும் லிபியாவை விட ரஷ்யாவில் அதிக இஸ்லாமிய மக்கள் உள்ளனர்.
அதேபோன்று எத்தியோப்பாவில் ஆப்கானிஸ்தானுக்கு இணையான இஸ்லாமியர்கள் உள்ளதாகவும் அதில் கூறப்பட்டுள்ளது.
0 comments:
கருத்துரையிடுக