வியாழன், 8 அக்டோபர், 2009
உலமாக்கள் நலவாரியத்தில் பதிவு செய்ய அழைப்பு
குமரி மாவட்ட கலெக்டர் ராஜேந்திர ரத்னூ வெளியிட்டுள்ள அறிக்கை:
குமரி மாவட்டத்தில் உலமாக்கள் மற்றும் பணியாளர்கள் நலவாரியத்தில் உறுப்பினர் பதிவுக்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்களை மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மையினர் நல அலுவலகத்தில் பெற்று கொள்ளலாம். 18 முதல் 60 வயது வரையுள்ளோர் உறுப்பினராக பதிவு செய்து கொள்ளலாம். உறுப்பினராக பதிவு செய்ய கட்டணம் ஏதும் கிடையாது. விண்ணப்பத்தை இலவசமாக பெற்று நகல் எடுத்து பலர் பயன்படுத்தி கொள்ளலாம்.
Labels:
உலமா நல வாரியம்,
குமரி மாவட்டம்
0 comments:
கருத்துரையிடுக