வெள்ளி, 9 அக்டோபர், 2009

தமிழருக்கு வேதியியலுக்கான நோபல் பரிசு

2009 ஆம் ஆண்டுக்கான வேதியியலுக்கான நோபல் பரிசை அமெரிக்க வாழ் தமிழர் வெங்கட்ராமன் ராமகிருஷ்ணன் உள்ளிட்ட மூவர் பகிர்ந்துகொண்டுள்ளனர். 
FILEஅமெரிக்க வாழ் பிரஜையாக உள்ளபோதும், பிரிட்டன் குடியுரிமையுடன் அங்குள்ள கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் "மாலிக்குலர் பயலாஜி" துறையின் எம்ஆர்சி ஆய்வுக்கூடத்தில் மூத்த விஞ்ஞானியாக பணியாற்றும் வெங்கட்ராமனுக்கு, ரைபோசோம் என்ப்படும் செல்களுக்குள் புரோட்டீன் உற்பத்தியாவது தொடர்பான ஆராய்ச்சிக்காக இந்தப் பரிசு வழங்கப்படுகிறது.

இவருடன் அமெரிக்கரான தாமஸ் ஸ்டெய்ட்ஸ் மற்றும் இஸ்ரேலைச் சேர்ந்த அதா யோனாத் ஆகியோரும் இந்த ஆண்டின் வேதியியல் துறைக்கான நோபல் பரிசை பகிர்ந்து கொள்கின்றனர்.

1952 ஆம் ஆண்டு தமிழகத்தின் சிதம்பரத்தில் பிறந்தவரான வெங்கட்ராமன், 1971 ஆம் ஆண்டில் பரோடா பல்கலைக் கழகத்தில் பௌதிகத்தில் பி.எஸ்சி பட்டம் பெற்றார்.அதனைத் தொடர்ந்து 1976 ஆம் ஆண்டில் ஓகியோ பல்கலைக்கழகத்திலிருந்து பௌதிகத்தில் பிஎச்.டி. பட்டம் பெற்ற அவர்,அதன் பின்னர் அமெரிக்காவின் கலிஃபோர்னியா பல்கலைக்கழகத்தில் உயிரியியல் துறையில் பேராசிரியராக பணியாற்ற்றினார். பின்னர் உயிரி வேதியியல் துறையில் டாக்டர் மவுரிக்கோ மோன்டலுடன் இணைந்தும் ஆராய்ச்சியில் ஈடுபட்டுள்ளார் வெங்கட்ராமன்.

0 comments:

கருத்துரையிடுக