திங்கள், 5 அக்டோபர், 2009

பிலிப்பின்ஸில் சூறாவளி: 16 பேர் பலி

பிலிப்பின்ஸில் சனிக்கிழமை வீசிய கடும் சூறாவளிக்கு 16 பேர் பலியானார்கள். 10-க்கும் மேற்பட்ட கிராமங்கள் வெள்ள நீரால் சூழப்பட்டுள்ளது.வடக்கு பிலிப்பின்ûஸ சூறாவளி தாக்கியது. இதில் பென்குயட் மாகாணத்தைச் சேர்ந்த ஒரு வயதுச் சிறுவன் உள்பட 5 பேரும், மற்றொரு கிராமத்தில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் உள்பட 7 பேரும் உயிரிழந்தனர்.
இந்த சூறாவளி ஞாயிற்றுக்கிழமை மதியத்துக்கு மேல் தைவானை நோக்கி நகர்ந்துவருகிறது. 8 நாள்களுக்கு முன்னர்தான் மணிலாவை கடும் புயல் தாக்கியது. இதில் சுமார் 300 பேர் இறந்தனர். கடந்த 40 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீசிய புயலால் தலைநகர் மணிலா நகரம் கடுமையாக பாதிக்கப்பட்டது. சனிக்கிழமை வீசிய புயலால் மணிலாவில் கடும் மழை பெய்தது. இதனால், நகரத்தின் நிலை படுமோசமாகியுள்ளது.

0 comments:

கருத்துரையிடுக