திங்கள், 5 அக்டோபர், 2009

மக்களவையில் ஜஸ்வந்த் தலைமையில் புதிய குழு

பாரதிய ஜனதா கட்சியில் இருந்து நீக்கப்பட்ட ஜஸ்வந்த் சிங் தலைமையில் மக்களவையில் புதிய குழுவாக செயல்பட தீர்மானிக்கப்பட்டுள்ளது. இதற்கு லோக் மோர்ச்சா என பெயரிடப்பட்டுள்ளது. இது குறித்து அதன் ஒருங்கிணைப்பாளரான திக்விஜய் சிங் கூறியதாவது:
ஆகஸ்டில் மும்பையில் நடைபெற்ற கூட்டத்தில் லோக் மோர்ச்சாவின் ஒருங்கிணைப்பாளராக என்னைத் தேர்வு செய்துள்ளனர்.  இதன் தலைவராக ஜஸ்வந்த் சிங் இருப்பார். ஜார்க்கண்ட் பேரவையின் முன்னாள் தலைவர் இந்தர்சிங் நாம்தாரி துணைத் தலைவராக செயல்படுவார். 
பாஜக, காங்கிரஸ் அல்லாத குழுவான இது, அரசுக்கு எதிராக ஆக்கப்பூர்வமான எதிரணியாக செயல்படும். மேலும் சுயேச்சை எம்.பி.க்கள் பலரையும் தொடர்பு கொண்டு பேசிவருகிறோம். மக்களவைத் தலைவர் மீரா குமாரை விரைவில் சந்தித்து தங்களை தனி அணியாக கருதுமாறு கேட்டுக் கொள்வோம்.
கோலாப்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த எம்.பி. ராஜு ஷெட்டியும் இந்த அணியில் உள்ளார். மகாராஷ்டிரத்தில் சில தொகுதிகளிலும் எங்கள் அணி போட்டியிடுகிறது. பிரபல பத்திரிகையாளர்களான பிரபாஷ் ஜோஷி, எம்.ஜே.அக்பர் ஆகியோரும் இந்த அணியுடன் தொடர்பில் உள்ளனர் என்றார்.

0 comments:

கருத்துரையிடுக