வெள்ளி, 2 அக்டோபர், 2009
கணினி தகவல்கள் : 8
விண்டோஸ் மற்றும் உபுண்டுவில் தேவையற்ற கோப்புகளை நீக்க உதவும் மென்பொருள்
தேவையற்ற கோப்புகள் நம் கணினியில் நம்மை அறியாமல் சேர்ந்துவிடும். முக்கியமாக இணையத்தில் உலாவும் போது நம்மை அறியாமல் டெம்ப் (Temp) கோப்புகள், படங்கள், அடியோ மற்றும் வீடியோ கோப்புகள் சேர்ந்துவிடும். இது எல்லா உலவி மற்றும் இயங்குதளத்திலும் நடக்கும். விண்டோஸ் மற்றும் உபுண்டுவில் இந்தவகை கோப்புகளை அழிக்க சிறிய மென்பொருள் பற்றிய விபரம் கிழே.
விண்டோஸ்:
விண்டோஸ் இயங்கு தளத்தில் இந்த டெம்ப் கோப்புகளை அகற்ற சி கிளினர் (CCleaner) என்ற மென்பொருள் உதவுகிறது. இந்த மென்பொருளை இந்த சுட்டியில் சென்று தரவிறக்கம் செய்து கொள்ளவும்.
உபுண்டு:
உபுண்டுவில் இது போன்ற ஒரு மென்பொருளை உபுண்டு இயங்குதளதிலிருந்தே பதித்து கொள்ளலாம். இதற்கான வழி முறை கிழே.
1. Applications --> Add/Remove மெனுவை கிளிக் செய்யவும்.
இது கிழே கொடுக்கப்பட்டுள்ள விண்டோவை திறக்கும். இதில் இடதுபுறத்தில் ஆல் என்ற மெனுவை கிளிக் செய்யவும். (படத்தை பெரிதாக பார்க்க படத்தில் கிளிக் செய்யவும்)
3. பின் வலதுபுறம் இருக்கும் தேடுதல் பகுதியில் (Search Box) என்று டைப் செய்து என்டெர் கீயை சொடுக்கவும். இது BleachBit என்ற மென்பொருளை விண்டோவின் மேற்பகுதியில் கொண்டுவரும்.
4. பின் வலதுபுறம் கிழே உள்ள Apply Changes என்ற பட்டனை கிளிக் செய்தால் மென்பொருள் கணினியில் பதித்துவிடும். இதை
Applications --> System Tools இல் சென்று இந்த மென்பொருளை இயக்கலாம்.
Labels:
கணினி தகவல்கள் : 8
0 comments:
கருத்துரையிடுக