வெள்ளி, 2 அக்டோபர், 2009

குமரி மாவட்டத்தில் பன்றிகாய்ச்சல் பலி மூன்றாக உயர்வு

கன்னியாகுமரி மாவட்டத்தில் பன்றி காய்ச்சல் நோய்க்கு பலியானவர்கள் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்தது.
நாகர்கோவில் அருகே ராமன்புதூரை சேர்ந்தவர் பெலிக்ஸ் (64). இவர் சிறிது காலம் லண்டனில் பணிபுரிந்து வந்தார். பின்னர் சொந்த ஊர் வந்த அவருக்கு காய்ச்சல் ஏற்பட்டு நாகர்கோவிலில் ஒரு தனியார் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டிருந்தார். பன்றி காய்ச்சல் அறிகுறி தென்பட்டதை தொடர்ந்து அவர் நாகர்கோவில் மருத்துவக்கல்லூரி ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவர் இறந்து போனார்.
இதை தொடர்ந்து குமரி மாவட்டத்தில் பன்றி காய்ச்சலுக்ககுபலியானவர்கள் எண்ணிக்கை மூன்றாக உயர்ந்துள்ளது. ஏற்கெனவே இடைக்கோடு பகுதியை சேர்ந்த வல்சலகுமாரி, மருதங்கோட்டை சேர்ந்த நிஷா ஆகிய இருவர் இறந்துள்ளனர்.

0 comments:

கருத்துரையிடுக