வெள்ளி, 2 அக்டோபர், 2009
சென்னையில் இருந்து நாகர்கோவிலுக்கு சிறப்பு இரயில்கள் இயக்கம்
தீபாவளியை முன்னிட்டு சென்னை சென்ட்ரலில் இருந்து நாகர்கோவில், கோவை இடையே கூடுதல் சிறப்பு இரயில்களை தெற்கு இரயில்வே இயக்குகிறது. இது தொடர்பாக தெற்கு இரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில் சிறப்பு இரயில் (0601) சென்ட்ரலில் இருந்து அக்டோபர் 3, 5, 7, 9, 12 ஆகிய தேதிகளில் இரவு 8.30-க்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 10.50 மணிக்கு நாகர்கோவிலுக்கு சென்று சேரும்.
நாகர்கோவில் -சென்னை சென்ட்ரல் சிறப்பு இரயில் (0602) நாகர்கோவிலில் இருந்து அக்டோபர் 4, 6, 8, 11, 13 ஆகிய தேதிகளில் மாலை 4.30-க்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்னை சென்ட்ரலுக்கு வந்து சேரும்.
சென்னை சென்ட்ரல் -கோவை சிறப்பு இரயில் (0613) சென்ட்ரலில் இருந்து அக்டோபர் 2, 9, 23, 30, நவம்பர் 6 ஆகிய தேதிகளில் இரவு 11.50-க்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 7.55 மணிக்கு கோவை சென்று சேரும். கோவை -சென்னை சென்ட்ரல் சிறப்பு இரயில் (0614) கோவையிலிருந்து அக்டோபர் 4, 11, 25, நவம்பர் 1, 8 ஆகிய தேதிகளில் 7.45-மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4 மணிக்கு சென்னை சென்ட்ரலுக்கு வந்து சேரும்.
சென்னை சென்ட்ரல் -எர்ணாகுளம் சிறப்பு இரயில் (0625) சென்ட்ரலில் இருந்து அக்டோபர் 1ஆம் தேதி இரவு 10.20-க்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 11 மணிக்கு எர்ணாகுளம் சென்று சேரும்.
எர்ணாகுளம் -சென்னை சென்ட்ரல் சிறப்பு இரயில் (0626) எர்ணாகுளத்தில் இருந்து அக்டோபர் 2ஆம் தேதி இரவு 7 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.40 மணிக்கு சென்னை சென்ட்ரலுக்கு வந்து சேரும்.இந்த சிறப்பு இரயில்களில் பயணம் செய்ய இன்று முன்பதிவு தொடங்குகிறது என்று தெற்கு இரயில்வே தெரிவித்துள்ளது
Labels:
இரயில்,
நாகர்கோவில்
0 comments:
கருத்துரையிடுக