ஞாயிறு, 25 அக்டோபர், 2009

போலீஸ் நிலையங்கள் நவீனமாகின்றன டயல் செய்தால் எப்ஐஆர் பதிவாகும்

இனிமேல் புகாரை பதிவு செய்ய போலீஸ் நிலையத்தில் தவமிருந்து போலீசாரின் தயவுக்காக காத்திருக்கவேண்டியது இல்லை. ஒரே ஒரு தெலைபேசி அழைப்பு மூலம் எளிதாக எப்ஐஆர் பதிவு செய்து கொள்ள லாம். தொலை பேசி மூலம் தெரிவிக்கும் புகார்களை காவல்நிலையத்தில் இருக்கும் இயந்திரம் எப்ஐஆர் ஆக பதிவு செய்துவிடும். 
காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி தேர்தலின் போது சட்டம், காவல்துறை நவீனமாக்கப்பட்டு சீரமைக்கப்படும் என வாக்குறுதி அளித்திருந்தது. இந்த வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் முதல்கட்டமாக போலீஸ் நிலையங்கள் நவீனமாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. 
இதன் ஒரு கட்டமாக காவல்நிலைய தொலைபேசியுடன் அதிநவீன எலக்ட்ரானிக் இயந்திரம் பொருத்தி அதன் மூலம் புகார்களை பதிவு செய்யும் வசதி செய்யப்பட்டுள்ளது. தொலைபேசி மூலம் பொதுமக்கள் புகார் தெரிவிக்கும் போது அதை இந்த இயந்திரம் எப்ஐஆர் ஆக பதிவு செய்து விடும். அதற்கான அச்சிடப்பட்ட நகலையும் தரும். இந்த நகல்களை மனுதாரர் மற்றும் குற்றம்சாட்டப்பட்டவருக்கு போலீசார் வழங்கினால் போதும். தற்போது காவல்நிலையத்தில் விசாரணைக் கைதிகளிடம் பெறப்படும் வாக்குமூலங்களை நீதிமன்றங்கள் ஏற்பதில்லை. இதை மாற்றுவதற்காக வீடியோ பதிவு முறையில் வாக்குமூலம் பெறும் முறையை நடைமுறைபடுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. 
நேற்று டெல்லியில் நடந்த நீதித்துறை அரசு அதிகாரிகள் கூட்டத்தில் Ôவிஷன் டாகுமெண்ட்Õ என்ற பெயரில் இந்த நவீன இயந்திரங்கள் அறிமுகம் செய்யப்பட்டன.

0 comments:

கருத்துரையிடுக