செவ்வாய், 27 அக்டோபர், 2009
குமரி மாவட்டத்தில் விமான நிலையம் அமைக்க நடவடிக்கை ஹெலன் டேவிட்சன் எம்.பி. தகவல்
குமரி மாவட்டத்தில் விமான நிலையம் மற்றும் குளச்சல் துறைமுகம் அமைக்க தீவிர நட வடிக்கை எடுத்து வருவ தாக ஹெலன் டேவிட்சன் எம்.பி. தெரிவித்தார். அவர் நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
மார்த்தாண்டம்-ஆலஞ் சோலை சாலையை செப்பனிட ரூ.1 கோடியே 60 லட்சம் டெண்டர் விடப்பட்டுள்ளது. திருவட்டாரில் தரைப்பாலம் அமைக்கவும் டெண்டர் விடப் பட்டுள்ளது. திக்குறிச்சி பகுதியில் தாமிரபரணி ஆற்றின் குறுக்கே பாலம் அமைக்க முயற்சிகள் மேற் கொள்ளப்பட்டு வருகிறது.
குளச்சலில் துறைமுகம் அமைக்க தீவிர முயற்சிகள் மேற்கொண்டு வருகிறேன். அது போல மணக்குடி அருகே விமான நிலையம் அமைக்கவும் தீவிர முயற்சிகள் மேற்கொள் ளப்பட்டு வருகிறது. இது தொடர்பாக சம்பந்தப் பட்ட மத்திய விமானத்துறை அமைச்சரை சந்தித்து பேசி னேன். அவர், மாநில அரசு பரிந்துரைக்க வேண்டும் என்று கூறினார். மாநில அரசு பரிந்துரை செய்ய தயாராக உள்ளது. அதற்கு மாவட்ட நிர்வாகம் பரிந்துரைக்க வேண்டும். அதற்காக மாவட்ட கலெக்டர் வழியாக உரிய நடவடிக்கை எடுக்கப் பட்டு வருகிறது. இவ்வாறு அவர் குறிப்பிட் டார்.
Labels:
குமரி மாவட்டம்,
குளச்சல்
0 comments:
கருத்துரையிடுக