இரயில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இரயில் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 17 ஏப்ரல், 2010

நாகர்கோவில் - திருநெல்வேலி ரயில்வே பாதை மின்மயமாகிறது.


திருவனந்தபுரம் கோட்ட ரயில்வே மேலாளர் ராஜீவ் தத் சர்மா நேற்று திருவனந்தபுரத்தில் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியது:
திருவனந்தபுரம் கோட்டம் கடந்த நிதியாண்டில் ரூ.836.88 கோடி மொத்த வருவாய் ஈட்டி தென்னக ரயில்வேயில் 2வது இடத்தை பிடித்துள்ளது. முந்தைய வருடத்தை விட இது 11 சதவீதம் அதிகமாகும்.கடந்த நிதியாண்டில் 98.1 மில்லியன் பயணிகள் பயணம் செய்துள்ளனர். முந்தைய நிதியாண்டை விட பயணிகள் வருவாய் மூலம் ரூ.35 கோடி அதிகமாக கிடைத் துள்ளது.
பார்சல் மூலம் கடந்த நிதியாண்டில் கிடைத்த வருமானம் ரூ.26.66 கோடியாகும். இது முந்தையை ஆண்டை விட ரூ.3 கோடி அதிகமாகும்.நாகர்கோவில் &மங்களூர் இடையே தற்போது வாரத்தில் 3 முறை இயக்கப்படும் ஏரநாடு எக்ஸ்பிரஸ் ரயில் விரைவில் தினசரி ரயிலாக இயக்க தீர்மானிக்கப் பட்டு ள்ளது.

சனி, 24 அக்டோபர், 2009

ஈ - மெயில் செய்தி
இரயில்வே டீ

இரயில் கழிப்பறை தண்ணீரால் டீ இடுகிறார் IRCTC டீ விற்பனையாளர்.



இரயில் கழிப்பறையில் டீ தயாராகிறது.


இரயில் கழிப்பறை ஹீட்டர் மூலர் டீ தயார்செய்யப்படுகிறது.


இரயில் பயணத்தில் டீ அருந்துபவர்களே, உடல் நலம் பேண சிந்தித்து செயல்படுவீர்.

வெள்ளி, 2 அக்டோபர், 2009

செ‌ன்னை‌யி‌‌ல் இரு‌ந்து நாகர்கோவிலுக்கு சிறப்பு இரயில்கள் இய‌க்க‌ம்


தீபாவளியை முன்னிட்டு சென்னை சென்ட்ர‌லி‌ல் இரு‌ந்து நாகர்கோவில், கோவை இடையே கூடுதல் சிறப்பு இரயில்களை தெ‌ற்கு இர‌யி‌ல்வே இய‌க்கு‌கிறது. இது தொட‌ர்பாக தெ‌ற்கு இர‌யி‌ல்வே வெ‌ளி‌யி‌ட்டு‌ள்ள செ‌ய்‌தி‌க்கு‌றி‌ப்‌பி‌ல், சென்னை சென்ட்ரல் - நாகர்கோவில் சிறப்பு இரயில் (0601) சென்ட்ரலில் இருந்து அக்டோபர் 3, 5, 7, 9, 12 ஆகிய தேதிகளில் இரவு 8.30-க்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 10.50 மணிக்கு நாகர்கோவிலுக்கு சென்று சேரும்.

நாகர்கோவில் -சென்னை சென்ட்ரல் சிறப்பு இரயில் (0602) நாகர்கோவிலில் இருந்து அக்டோபர் 4, 6, 8, 11, 13 ஆகிய தேதிகளில் மாலை 4.30-க்கு புறப்பட்டு, மறுநாள் காலை 8.30 மணிக்கு சென்னை சென்ட்ரலுக்கு வந்து சேரும்.

சென்னை சென்ட்ரல் -கோவை சிறப்பு இரயில் (0613) சென்ட்ரலில் இருந்து அக்டோபர் 2, 9, 23, 30, நவம்பர் 6 ஆகிய தேதிகளில் இரவு 11.50-க்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 7.55 மணிக்கு கோவை சென்று சேரும். கோவை -சென்னை சென்ட்ரல் சிறப்பு இரயில் (0614) கோவையிலிருந்து அக்டோபர் 4, 11, 25, நவம்பர் 1, 8 ஆகிய தேதிகளில் 7.45-மணிக்குப் புறப்பட்டு, மறுநாள் அதிகாலை 4 மணிக்கு சென்னை சென்ட்ரலுக்கு வந்து சேரும்.

சென்னை சென்ட்ரல் -எர்ணாகுளம் சிறப்பு இரயில் (0625) சென்ட்ரலில் இருந்து அக்டோபர் 1ஆம் தேதி இரவு 10.20-க்குப் புறப்பட்டு, மறுநாள் காலை 11 மணிக்கு எர்ணாகுளம் சென்று சேரும்.

எர்ணாகுளம் -சென்னை சென்ட்ரல் சிறப்பு இரயில் (0626) எர்ணாகுளத்தில் இருந்து அக்டோபர் 2ஆம் தேதி இரவு 7 மணிக்கு புறப்பட்டு, மறுநாள் காலை 7.40 மணிக்கு சென்னை சென்ட்ரலுக்கு வந்து சேரும்.இந்த சிறப்பு இரயில்களில் பயணம் செய்ய இ‌‌ன்று முன்பதிவு தொடங்குகிறது எ‌ன்று தெ‌ற்கு இர‌யி‌ல்வே தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது

செவ்வாய், 25 ஆகஸ்ட், 2009

தட்கல் முன்பதிவு கட்டணம் குறைப்பு: அக்டோபர் 1 முதல் அமலாகிறது

தட்கல் முன்பதிவுக் கட்டணங்கள் வரும் அக்டோபர் 1ம் தேதி முதல் குறைக்கப்படுகின்றன. ரயில்வே செய்தி தொடர்பாளர் கூறியதாவது:"

ஸ்லீப்பர் கோச்சு'களுக்கு 150 ரூபாயில் இருந்து 100 ஆகவும், "ஏசி' இருக்கை வசதி 150- ரூபாயில் இருந்து 75 ஆகவும், மற்ற அனைத்து "ஏசி' வகுப்புகளுக்கு 300 ல் இருந்து 200 ஆகவும், இரண்டாம் வகுப்பு இருக்கை வசதிக்கு 15 ல் இருந்து 10 ஆகவும் குறைக்கப்படுகிறது. தட்கல் முன்பதிவு டிக்கெட்டுகளுக்கு முன்பு, ரயில் புறப்படும் இடத்தில் இருந்து சென்றடையும் இடம் வரையிலான தூரத்தை கணக்கிட்டு கட்டணம் வசூலிக்கப்பட்டு வந்தது. இனிமேல், பயணம் செய்யும் தூரத்துக்கு மட்டும் கட்டணம் வசூலிக்கப்படும்.

இருந்தாலும், குறிப்பிட்ட அளவு தூரம் உள்ள இடங்களுக்கு மட்டுமே இது பொருந்தும். குறைந்த தூரம் உள்ள இடங்களுக்கு செல்ல இது பொருந்தாது. தட்கல் ஒதுக்கீட்டில் காலியிடம் இருக்கும் பட்சத்தில், அது பொது, ஆர்.ஏ.சி., மற்றும் காத்திருப்போர் பட்டியலில் உள்ளவர்களுக்கு ஒதுக்கப்படும். தட்கல் முன்பதிவு வசதி, சதாப்தி எக்ஸ்பிரஸ் ரயில்களிலும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது. தட்கல் முன்பதிவு செய்த டிக்கெட்டுகளை ரத்து செய்வதில், தற்போது உள்ள நடைமுறைகளே தொடரும். இவ்வாறு ரயில்வே செய்தி தொடர்பாளர் கூறினார்.



வெள்ளி, 7 ஆகஸ்ட், 2009

நாகர்கோவிலுக்கு இயக்கப்படும் ஏழைகள் ரத சிறப்பு இரயில் மேலும் 2 மாதத்திற்கு நீடிப்பு

சென்னை சென்‌ட்ரலில் இருந்து நாகர்கோவிலுக்கும், நாகர்கோவிலில் இருந்து சென்னை சென்‌ட்ரலுக்கும் வாரந்திர சிறப்பு இரயில்கள் (ஏழைகள் ரதம்) சென்று வருகிறது. தற்போது இந்த இர‌யில் மேலும் 2 மாதத்திற்கு நீடிக்கப்பட்டுள்ளது எ‌ன்று தெ‌ற்கு இர‌யி‌ல்வே அ‌றி‌வி‌‌த்து‌ள்ளது.

இது தொட‌ர்பாக தெற்கு இரயில்வே வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சென்னை சென்‌ட்ரலில் இருந்து புதன்கிழமை தோறும் நாகர்கோவிலுக்கு (வ.எண்.0607) சிறப்பு இரயில் (ஏழைகள் ரதம்) இயக்கப்பட்டு வருகிறது. அதே போல், மறுமார்க்கத்தில் வியாழக்கிழமை தோறும் நாகர்கோவிலில் இருந்து சென்‌ட்ரலுக்கு(0608) சிறப்பு இரயில்கள் இயக்கப்பட்டு வருகிறது.

இந்த இரயில் மேலும் 2 மாதங்கள் நீட்டிக்கப்பட்டுள்ளது. அதன்படி, சென்னை-நாகர்கோவில் சிறப்பு இரயில் ஆகஸ்‌ட் 19ஆ‌ம் தேதி முதல் அக்டோபர் 28ஆ‌ம் தேதி வரையும், நாகர்கோவில்-சென்னை சிறப்பு இரயில் ஆகஸ்‌ட் 20ஆ‌ம் தேதி முதல் அக்டோபர் 29ஆ‌ம் தேதி வரையிலும் நீடிக்கப்பட்டுள்ளது எ‌‌ன்று தெற்கு இரயில்வே அ‌றி‌வி‌த்து‌ள்ளது