புதன், 14 அக்டோபர், 2009

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் உதவித்தொகை பெற விண்ணப்பிக்கலாம் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் அறிக்கை

படித்த வேலைவாய்ப்பற்ற இளைஞர்கள் தமிழக அரசின் உதவித்தொகை பெற விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.இது குறித்த குமரி மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ரவீந்திரன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பு: 
மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் 10ம் வகுப்பும், அதற்கு மேலும் உள்ள கல்வி தகு தியை பதிவு செய்து 5 ஆண்டுகள் முடிவடைந்து தொடர்ந்து புதுப்பித்து வரும் பதிவுதாரர்களுக்கு உதவித்தொகை வழங்கப்பட்டு வருகிறது. தற்போது 1.10.09 முதல் 30.11.09 தேதி வரையிலான காலத்திற்கு உதவித்தொகை வழங்குவதற்கான நடவடிக்கை மேற் கொள்ளப்பட்டு வருகி றது. வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 30.09.2009 தேதியில் 5 ஆண்டுகள் நிறைவு செய் துள்ள பதிவுதாரர்கள் வேலைவாய்ப்பு அடை யாள அட்டை மற்றும் அனைத்து அசல் கல்வி சான்றிதழ்களுடன் அலுவ லக வேலை நாளில் நேரில் வந்து இலவசமாக விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப் பத்துடன் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி சேமிப்பு கணக்கு புத்தகம் மற்றும் அனைத்து அசல் கல்வி சான்றிதழ்களுடன் வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நேரில் வந்து நவம்பர் மாத இறுதிக்குள் அளிக்க வேண்டும்.
இந்த திட்டத்தின் கீழ் ஏற்கனவே உதவித்தொகையை பெற்றுவரும் பயனாளிகள் இந்த உதவித்தொகையை தொடர்ந்து பெற வேண் டும் என்றால் சுய உறுதி மொழி ஆவ ணத்தை ஆண்டிற்கு ஒரு முறை சமர்ப்பிக்க வேண் டும். இதன்படி 30.9.2009 வரையான காலத்திற்கு உதவித்தொகை பெறும் பயனாளிகள் தொடர்ந்து உதவித்தொகை பெறுவதற்கு சுய உறுதிமொழி ஆவணத்தை அதற்குரிய படிவத்தில் நாகர்கோவில் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் நவம்பர் மாத இறுதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். இதில் இதுவரை வங்கியில் வரவு வைக்கப்பட்ட வங்கி கணக்கு விபரம் மற்றும் வேலைவாய்ப்பு அலுவலக பதிவு அட்டை ஆகியவற்றை மறுபரிசீலனைக்கு சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments:

கருத்துரையிடுக