வியாழன், 12 நவம்பர், 2009

அக்ஸாவுக்கு அருகில் இரவுநேரக் கேளிக்கை விடுதிகளை அமைக்க இஸ்ரேல் திட்டம்




ஆக்கிரமிக்கப்பட்ட ஜெரூசலத் தில் உள்ள புனித பைத் துல் அக்ஸா வுக்கு அருகில் இரவு நேரக் கேளிக்கை விடுதிகளை அமைப்பதற்கு இஸ்ரேலிய ஆக்கிரமிப்பு அரசாங் கம் திட்டமிட்டுள்ள தாக பலஸ்தீன் சட்டசபையின் குத்ஸ் அமைப்புத் தலைவர் கலாநிதி அஹ்மத் அபூ ஹலாபியா எச்சரிக்கை விடுத்துள் ளார்.
அவர் மேலும் தெரிவிக்கையில், இஸ்ரேலிய ஆக்கிரமிப்புக் குடி யேற்ற வாசிகள் பைத்துல் அக்ஸா வின் புனிதத்துவம் பற்றிய எத்தகைய மரியாதை உணர்வுமின்றி,அந்த வளாகத்தினுள் மதுபானம் அருந்தி வருவதை எதிர்த்தும், அல்-அக்ஸா வுக்கு ஆதரவாகவும் பேரணி யொன்று இடம்பெற்றதாகக் குறிப் பிட்டார்.
அளவு கடந்த கால தாமதத்தி னால் கைசேதப்படும் நிலை ஏற் படும் முன்பு புனிதத் தலத்தைப் பாதுகாக்கும் பொருட்டு திரண்டெழு மாறு அரபு – இஸ் லாமிய நாடுகளை நோக்கி அவர் அழைப்புவிடுத்தார்.
கலாநிதி அஹ்மத் அபூ ஹலா பியா மேலும் கருத்துரைக்கையில், புனித ஜெரூசலம் நகரினை யூதமயப் படுத்துமுகமாக ஜெரூசலவாசி களான பலஸ் தீனர்களின் அடையாள அட்டைகளைப் பறிமுதல் செய்தல், அவர்களைத் தத்தமது இருப்பிடங் களிலிருந்து வெளியேற்றி அவர் களின் வீடுகளை இடித்துத் தரை மட்டமாக்குதல்,பலஸ்தீனர்களுக் குச் சொந்தமான ஆயிரக்க ணக்கான தூனம் (1 தூனம் : 1000 சதுர அடி) நிலப்பரப்பினைப் பறிமுதல் செய் தல், அல்-அக்ஸா மஸ்ஜிதுக்குத் தொழுகைக்காகப் பிரவேசிக்க விடாமல் ஆயிரக்கணக்கான தொழு கையாளிகளைத் தடுத்துநிறுத்துதல் முதலான இன்னோரன்ன நட வடிக்கைகளில் இஸ்ரேலிய ஆக்கிர மிப்பு அரசாங்கம் ஈடுபட்டுவரு வதாகச் சுட்டிக்காட்டினார்

0 comments:

கருத்துரையிடுக