வியாழன், 28 ஜனவரி, 2010

ரேஷன் கடைகளில் 1-ந்தேதி முதல் மலிவு விலை மளிகை பொருட்கள்!

வரும் பிப்ரவரி 1-ந்தேதி முதல் ஒரு குடும்பத்திற்கு தேவையான அனைத்து மளிகை பொருட்களும் அடங்கிய புதிய திட்டம் ஒன்று அறிமுகப்படுத்தப்படுகிறது.
“எக்னாமி பாக்கெட், ஸ்பெஷல் பாக்கெட், என்ற பெயரில் வீட்டிற்கு தேவையான மளிகை பொருட்களை உள்ளடக்கி ஏழை, நடுத்தர மக்களுக்கு குறைந்த விலையில் விற்க திருவல்லிக்கேணி நகர கூட்டுறவு சங்கம் (டி.யு.சி.எஸ்.) திட்டமிட்டுள்ளது. 33 பொருட்கள் கொண்ட “எகனாமி பாக்கெட் ரூ.666-க்கு விற்கப்படும். இந்த திட்டத்தில் மஞ்சள் 50 கிராம், சீரகம் 50 கிராம், கடுகு, உடைத்த பருப்பு, சோம்பு, வெந்தயம் ஆகிய தலா 50 கிராமும், மிளகு 25 கிராம் அடங்கும்.
ரின் சோப்பு 5 (100 கிராம்), ஷேம்பு- 5 பாக்கெட், ஹமாம் அல்லது

லக்ஸ் சோப்பு 2 (100கிராம்), பல் பேஸ்ட் 80 கிராம், சமையல் எண்ணை 1 லிட்டர் பாக்கெட் இரண்டு, இதயம் நல்லெண்ணை 200 மில்லி, பாராசூட் தேங்காய் எண்ணை-100 மில்லி, சபினா 450 கிராம் பாக்கெட், பாத்திரம் தேய்க்க கூடிய பிரஷ் 1, தீப்பெட்டி- 1 ஆகியவை இந்த திட்டத்தில் அடங்கும். வெளி மார்க்கெட்டில் இதன் மதிப்பு ரூ.800.
மேலும் உப்பு, புளி, குண்டு மிளகாய், மல்லி தலா 500 கிராம், கடலை பருப்பு, உளுத்தம் பருப்பு, துவரம் பருப்பு, பாசிப்பருப்பு தலா 1/2 கிலோ, வறு கடலை, பச்சைப்பட்டாணி, கொண்ட கடலை, தலா 200 கிராம், அப்பளம் ஒரு கட்டு, அரிசி வடகம் ஒரு பாக்கெட்டு, பினாயில் 1 பாட்டில், கிளினிக் ஆசிட் 1 பாட்டில்.
ஸ்பெஷல் பேக்கேஜ் திட்டத்தில் ரூ.999-க்கு 46 மளிகை பொருட்கள் வழங்கப்படுகின்றன. மேற்கண்ட 33 பொருட்களுடன் மேலும் 13 வகை பொருட்கள் சேர்த்து வழங்கப்படும். பூஸ்ட் அல்லது ஹார்லிக்ஸ் 1/2 கிலோ பாக்கெட், முந்திரி, திராட்சை, சேமியா, டீத்தூள் 200 கிராம், ஆட்டா, மைதா, ரவா தலா 1/2 கிலோ, பேரிச்சம்பழம் 100 கிராம், ஹேர் ஆயில் 100 கிராம், டூத் பிரஸ்-1, சமையல் அரை சிறிய துண்டு ஆகியவை இதில் அடங்கும்.இதன் வெளிமார்க்கெட் விலை ரூ.1200 ஆகும்.
இதுகுறித்து டி.யூ.சி.எஸ். இணைப்பதிவாளர் சரவணன் அவர்களிடம் கேட்டபோது, சாதாரண மக்களுக்கு குறைந்த விலையில் மளிகை பொருட்கள் கிடைக்க வேண்டும் என்ற நோக்கில் இந்த திட்டத்தை 1-ந்தேதி முதல் செயல்படுத்துகிறோம். டி.யு.சி.எஸ். சொந்தமான 220 ரேஷன் கடைகளிலும் 8 சுயசேவை பிரிவுகளிலும் 8 மண்எண்ணை வழங்கும் நிலையங்களிலும் மொத்தம் சென்னையில் 236 இடங்களில் குறைந்த விலை மளிகை பொருட்கள் கிடைக்கும் என்றார்.

0 comments:

கருத்துரையிடுக