காஞ்சீபுரம் பிள்ளையார்பாளையத்தில் உள்ள சி.எஸ்.எம்.தோப்புத் தெருவில் உள்ள தண்ணீர் இல்லாத கிணற்றில் பெண் குழந்தை ஒன்று இறந்து கிடந்தது. பிறந்த உடனே குழந்தை கிணற்றுக்குள் வீசப்பட்டுள்ளதாக தெரிகிறது. அந்த பகுதியில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் கிணற்றை எட்டிப் பார்த்தனர்.
அப்போது கிணற்றுக்குள் குழந்தை ஒன்று இறந்து கிடப்பதைக் கண்டனர். இதுபற்றி தகவலறிந்ததும் அக்கம், பக்கத்திலிருந்தவர்கள் 108 ஆம்புலன்சுக்கு போன் செய்து வரவழைத்தனர்.
ஆம்புலன்ஸ் ஊழியர்கள் கிணற்றுக்குள் இறங்கி குழந்தையின் உடலை மீட்டனர். பிறகு உடலை பரிசோதனைகக்காக காஞ்சீபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுச் சென்றனர். இதுகுறித்து சிவகாஞ்சி போலீஸ் சப்&இன்ஸ்பெக்டர் கலைவாணி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினார். குழந்தையை கிணற்றில் வீசிய தாயாரை போலீசார் வலைவீசி தேடிவருகின்றனர்.
0 comments:
கருத்துரையிடுக