சனி, 30 ஜனவரி, 2010

துபாயில் ஹமாஸ் இயக்கத் தலைவர் கொல்லப்பட்டார்.

பாலஸ்தீனத்தில் செயல்பட்டு வரும் ஹமாஸ் இயக்க தளபதியும், ஆட்சி மன்றக் குழு உறுப்பினருமான மகமூத் அல் மகபூப் (வயது 50) 1989-ம் ஆண்டு முதல் சிரியா நாட்டில் வசித்து வந்தார். 10 நாட்களுக்கு முன்பு அவர் துபாய் நகருக்கு வந்தார். அங்கு வந்த மறுதினமே (ஜனவரி 20-ந்தேதி) அவர் படுகொலை செய்யப்பட்டார்.
இந்த தகவலை பாலஸ்தீன இஸ்லாமிய குழு ஒன்றின் தலைவரான இஜாத் அல்-ரிஷிக், டமாஸ்கஸ் நகரில் தெரிவித்தார்.

 அவர் மேலும் கூறுகையில், `மகபூப்பை இஸ்ரேல் உளவு படையினர் கொன்றுள்ளனர். அவர் எப்படி கொலை செய்யப்பட்டார் என்பது பற்றி என்னால் தெரிவிக்க முடியாது. மகபூப் கொல்லப்பட்டது தொடர்பாக ஐக்கிய அரபு எமிரேட் அதிகாரிகளுடன் பேசி வருகிறோம்' என்றார்.

0 comments:

கருத்துரையிடுக