இந்த ஆய்வு முடிவுகளை உறுதி செய்த பால்டிமோர் ஜான்ஹாப்ஸ்கின்ஸ் பல்கலைகழக டாக்டர் மதுரம் சந்தோஷம், வயிற்றுப் போக்குக்கான தடுப்பூசி மருந்து குழந்தைகளுக்கு தரப்பட்டால் 10 ஆண்டுகளில் 20 லட்சம் குழந்தைகளின் உயிரைக் காக்க முடியும் என்று கூறினார். இந்த கருத்துகளை நியூ இங்கிலாந்து ஜர்னல் ஆப் மெடிசின் புதனன்று வெளியிட்டது.
இரண்டு வயதுக்கு உட்பட்ட பச்சிளங்குழந்தைகளை ரோட்டாவைரஸ் தாக்கும் பொழுது கடுமையான வயிற்றுப் போக்கு ஏற்படுகிறது. திடீரென்று ஏற்படும் இந்த வயிற்றுப் போக்கு காரணமாக உடலில் உள்ள நீர்ச்சத்து குறைந்து விடுகிறது. அதனால் குழந்தைகளின் இரத்த அழுத்தம் குறைந்து அனைத்து உறுப்புகளும் செயலிழந்து குழந்தைகள் மரணமடைகின்றன.
இந்த ரோட்டாவைரஸிற்கு எதிரான தடுப்பூசி மருந்துகள் கனடா மற்றும் அமெரிக்காவில் எல்லா குழந்தைகளுக்கும் வழங்கப்படுகிறது. பிறந்த குழந்தைகளுக்குத் தரப்பட வேண்டிய தடுப்பூசி மருந்துகளுடன் ரோட்டாவைரஸிற்கு எதிரான தடுப்பூசி மருந்துகளும் அங்கு சேர்க்கப்பட்டுள்ளன. மெர்க் அண்ட் கம்பெனிரோட்டாடெக் என்ற பெயரிலும், கிளாக்ஸோஸ்மித்க்ளீன் நிறுவனம் ரோட்டாரிக்ஸ் என்ற பெயரிலும் தடுப்பூசி மருந்துகளை தயாரிக்கின்றன.
இந்த தடுப்பூசி மருந்துகளைப் பயன்படுத்தி மெக்ஸிகோவில் 2006முதல் ஆய்வுகள் நடத்தப்பட்டன. 2009ல் அங்கு வயிற்றுப் போக்கினால் ஏற்படும் இளங்குழந்தைகளின் மரணத்தை 65 சதவீதம் தவிர்க்க முடிந்தது. தெற்கு ஆப்பிரிக்கா, மாலாவியில் கிளாக்ஸோஸ்மித்க்ளீன் நிறுவனத்தின் தடுப்பூசி மருந்தைப் பயன்படுத்தி ஆய்வுகள் நடத்தப்பட்டன. அந்த நாடுகளில் 61 சதவீதம் மருந்துகள் பயன் அளித்தது. சோதனையின் போது தடுப்பூசி மருந்து தரப்பட¢ட குழந்தைகளில் 1.9 சதவீதம் மட்டுமே கடுமையான வயிற்றுப் போக்கு ஆளாயின.
மெக்ஸிகோ, தென் ஆப்பிரிக்கா, மாலாவியில் குழந்தைகளுக்கு கிடைத்த பயன் மற்ற ஆப்பிரிக்க நாடுகளில் உள்ள குழந்தைகளுக்கும் மற்ற வளரும் நாடுகளில் உள்ள குழந்தைகளுக்கும் கிடைக்க நாம் வகை செய்தாக வேண்டும் என பில் அண்ட் மெலிண்டா கேட்ஸ் பவுண்டேஷனைச் சேர்ந்த டாக்டர் டாச்சி யாமாடா கூறினார்.

0 comments:
கருத்துரையிடுக