வியாழன், 25 பிப்ரவரி, 2010

ஹைட்டி: நிலநடுக்க பலி 2,22,000 என ஐ.நா. அறிவிப்பு

ஹைட்டியில் நிலநடுக்கத்திற்கு பலியானோர் எண்ணிக்கை 2,22,500 ஆக இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளதாக ஐ.நா. தெரிவித்துள்ளது.  கரீபியன் தீவு நாடுகளின் ஒன்றான ஹைட்டியில் கடந்த ஜனவரி 13 ஆம் தேதியன்று அதிகாலை கடுமையான நிலநடுக்கம் ஏற்பட்டது.ரிக்டர் அளவில் இது 7.0 ஆக பதிவானது. 
இந்த நிலநடுக்கத்திற்கு சுமார் 2 லட்சத்திற்கும் அதிகமானோர் பலியானதாக முன்னர் தெரிவிக்கப்பட்டிருந்த நிலையில், இடிபாடுகளில் இன்னும் புதைந்து கிடக்கும் சடலங்களையும் சேர்த்தால் பலி எண்ணிக்கை 3 லட்சமாக அதிகரித்து இருக்கலாம் என்று ஹைட்டி அதிபர் ரெனி பெர்வல் கடந்த இரு தினங்களுக்கு முன்னர் தெரிவித்திருந்தார்.  ஆனால் பலி எண்ணிக்கை 2,22,500 ஆக இருக்கலாம் என மதிப்பிடப்பட்டுள்ளதாக ஐ.நா. மனிதாபிமான விவகாரங்களுக்கான ஒருங்கிணைப்புக் குழு தெரிவித்துள்ளது.

0 comments:

கருத்துரையிடுக