சனி, 27 பிப்ரவரி, 2010
போலி இணையதளம் மூலம் வருமானவரி மோசடி! ஜாங்கிட் எச்சரிக்கை
சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் ஜாங்கிட் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தற்போது வருமானவரி செலுத்துவதற்கான மாதம் என்பதால், இதனைப் பயன்படுத்தி பொது மக்களை ஏமாற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் அரசு அனுமதியின்றி புதிதாக http;//217.8.82.71/ gov.in/ taxation/iti/india/index.php. என்ற இணையதளத்தை உருவாக்கியுள்ளனர்.
இந்த இணையதளத்தினுள் சென்றவுடன் வருமான வரி செலுத்துவதற்கான சில விபரங்கள் கேட்கப்பட்டுள்ளன. அதில் தங்களது பெயர், பிறந்த தேதி, முகவரி, தொலைபேசி எண், வங்கியின் பெயர், பயன்படுத்தும் ஏ.டி.எம். கார்டின் எண், கார்டு முடிவடையும் தேதி மற்றும் ஏ.டி.எம். காடிற்கான ரகசிய எண் ஆகிய கேள்விகள் கேட்கப்பட்டுள்ளன.
இதில் கேட்கப்பட்டுள்ள அனைத்து விபரங்களையும் பூர்த்தி செய்வதுடன், முக்கியமான ஏ.டி.எம். ரகசிய எண்ணை பதிவு செய்தீர்கள் என்றால், அந்த எண்ணை பயன்படுத்தி, ரகசிய எண்ணை வழங்கியவர் கணக்கிலிருந்து அவருக்கே தெரியாமல் அவரது பணம் முழுவதும் எடுக்கப்படும். எனவே பொதுமக்கள் வருமானவரி செலுத்து வதற்கான மேற்கண்ட இணைய தளத்தை யாரும் பயன்படுத்த வேண்டாம் என்றும் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்றும் அவர் கேட்டு கொண்டுள்ளார்.
0 comments:
கருத்துரையிடுக