புதன், 24 மார்ச், 2010
தேர்வு முடிவுகள் பற்றி கவலை வேண்டாம்! அப்துல்கலாம்.
நடந்து முடிந்த தேர்வுகளின் முடிவுகள் குறித்து மாணவர்கள்
கவலைப்படவேண்டாம் என முன்னாள் குடியரசு தலைவரும் ராக்கெட் விஞ்ஞானியுமான டாக்டர்
அப்துல் கலாம் அறிவுரை கூறியுள்ளார். இது தொடர்பாக மாணவர்களுக்கு அவர் எழுதியுள்ள
கடிதத்தில் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது..
பள்ளியில் படிக்கும்
மாணவர்கள் பல்வேறு தேர்வுகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது. இந்தத் தேர்வு முடிவுகள்
எதிர்பார்த்தவாறு அமையாவிட்டால், அதற்காக மாணவர்கள் மனம் சோர்ந்துவிட
வேண்டியதில்லை. தேர்வு முடிவுகள்தான் வாழ்க்கையில் இறுதியானது எனக் கருத வேண்டாம்.
முதல் தடவை நான்
தேர்வை சரியாக எழுதவில்லையெனில் அடுத்த முறை நன்றாக எழுதி வெற்றி பெற்று விடுவேன்.
வெற்றி எப்பொழுதுமே மகிழ்ச்சியைத் தரும். ஆனால், பல காரணங்களால் சில சமயம் நாம்
பின்னடைவைச் சந்திக்க வேண்டியிருக்கும். இதையும் நாம் துணிவுடன் எதிர்கொள்ள
வேண்டும். வாழ்க்கையில் நாம் சில எதிர்பாராத பிரச்னைகளை எதிர்கொள்வதற்கு
எப்பொழுதும் தயாராக இருக்க வேண்டும் என என்னுடைய ஆசிரியர் கூறிய அறிவுரையை
உங்களுக்கு நான் கூற விரும்புகிறேன்.
கடவுள் நம்முடன்
இருப்பாரானால், ஒருவரும் உங்களுக்கு எதிராகச் செயல்பட முடியாது. எனவே,
தொடர்ந்து முயற்சி செய்தால், நிச்சயம் வெற்றி கிட்டும். தாற்காலிகமாக ஏற்படும்
பின்னடைவுக்காக மனம் சோர்ந்து போய்விட வேண்டாம் என்று அப்துல்கலாம்
கூறியுள்ளார்.
Labels:
அப்துல்கலாம்
0 comments:
கருத்துரையிடுக