சனி, 17 ஏப்ரல், 2010

சிபிஐ - புலனாய்வு செய்ய வேண்டிய வழக்குகள் சுமார் 1,100


மத்திய புலனாய்வு கழகமான - சிபிஐ - புலனாய்வு செய்ய வேண்டிய வழக்குகள் சுமார் 1,100 க்கும் அதிகமானவை நிலுவையில் இருப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது. 
மாநிலங்களவையில் இன்று கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலம் அளித்த பதிலில் இதனை தெரிவித்த மத்திய இணையமைச்சர் பிருத்விராஜ் சவான், சிபிஐ-யால் விசாரிக்கப்பட வேண்டிய 1,120 ஊழல் மற்றும் பொருளாதார வழக்குகள் நிலுவையில் உள்ளது என்றார். 
இந்த ஆண்டில் கடந்த ஜனவரி முதல் பிப்ரவரி மாதம் வரையிலான காலக்கட்டத்தில் 225 புதிய ஊழல் மற்றும் பொருளாதார வழக்குகள் பதிவாகி உள்ளன. 
கடந்த 2007 ஆம் ஆண்டில் 940 வழக்குகள் பதிவான நிலையில், 2008 ல் 991, 2009 ஆம் ஆண்டில் 1,119 வழக்குகள் பதிவாகியுள்ளதாக அவர் மேலும் கூறினார்

0 comments:

கருத்துரையிடுக