சனி, 17 ஏப்ரல், 2010

புதிய ரேஷன் கார்டுகளில் கை விரல் ரேகை பதிவு!



உணவுத் துறை மானியக் கோரிக்கை மீது பேரவையில் நேற்று நடந்த விவாதத்துக்கு அமைச்சர் எ.வ.வேலு பதிலளித்து பேசியதாவது:
தற்போது 2,000 குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள 346 நியாய விலை கடைகள் பிரிக்கப்பட்டு புதிய நியாய விலைக் கடைகள் திறக்கப்பட்டுள்ளன. இதன் அடுத்த கட்டமாக 1,600 குடும்ப அட்டைகளுக்கு மேல் உள்ள நியாய விலைக் கடைகள் பிரிக்கப்பட்டு புதிய கடைகள் திறக்கப்படும். பொது வினியோக திட்டத்தில் உள்ள குறைபாடுகளை களைய ஒட்டுமொத்த மின்னணு செயல்பாட்டு முறை செயல்படுத்தப்படும்.
தகுதி உள்ள குடும்ப அட்டைதாரர்களின் அனைத்து குடும்ப நபர்களின் கை விரல் ரேகை மற்றும் கண் மணி ஆகியவற்றை பதிவு செய்து அவர்களுக்கு புதிய குடும்ப அட்டைகள் வழங்குவது மூலம் ஒரே நபர் பல இடங்களில் பல்வேறு பகுதிகளில் குடும்ப அட்டை பெறவும் ஒருவர் பெயர் பல இடங்களில் சேர்க்கப்படுவதையும் முழுமையாக தவிர்த்து தகுதியற்ற குடும்ப அட்டைகள் வழங்கும் நிலை முற்றிலும் ஒழிக்கப்பட்டு விடும் என்று கருதப்படுகிறது.

கூட்டுறவு நியாய விலைக் கடை விற்பனையாளர்கள் மற்றும் எடையாளர்களுக்கு ஊதிய உயர்வு வழங்குவது பற்றி பரிசீலிக்க குழு அமைக்கப்படும். குழு பரிந்துரை பெற்று அரசு உரிய நடவடிக்கை எடுக்கும். உணவுப் பொருள் வழங்கல், நுகர்வோர் பாதுகாப்புத் துறையில் சென்னையில் புதிதாக விருகம்பாக்கம் மண்டலம் உருவாக்கப்படும். சேமிப்பு கிடங்குகளில் பணியாற்றும் பணியாளர்கள் இறக்க நேரிட்டால் அவர்கள் குடும்பத்துக்கு நலநிதியாக ரூ.60 ஆயிரம் வழங்கப்படுகிறது. அந்த தொகை ரூ.1 லட்சமாக உயர்த்தப்படும். நுகர்வோருக்கு ஆலோசனை வழங்க மையங்கள் தொடங்கப்படும்.

0 comments:

கருத்துரையிடுக