வெள்ளி, 16 ஏப்ரல், 2010
''எந்தப் பொருளும் வேண்டாம் எனக் கோரி விண்ணப்பித்தால் 15 நாளில் குடும்ப அட்டை வழங்கப்படும்''
''எந்தப் பொருளும் வேண்டாம்
எனக் கோரி விண்ணப்பித்தால் 15 நாளில் குடும்ப அட்டை வழங்கப்படும்''
என்று உணவு அமைச்சர் எ.வ.வேலு சட்டப்பேரவையில்
தெரிவித்துள்ளார். உணவு மானிய கோரிக்கை
விவாதத்திற்கு அமைச்சர் எ.வ.வேலு பதில் அளித்து பேசுகையில் இதனை
தெரிவித்தார். தமிழ்நாட்டில் 24 லட்சம் போலி
குடும்ப அட்டைகள் புழக்கத்தில் இருப்பதாக சந்தேகம் தெரிவித்த
அமைச்சர் வேலு, போலி
என சந்தேகப்படும் குடும்ப அட்டைகளை அதிகாரிகள் சோதனை நடத்தி
வருகின்றனர் என்றார். பொது விநியோகத் திட்டம்
முழுவதும் விரைவில் கணினி மயமாக்கப்படும் என்றும் அமைச்சர் வேலு
கூறினார்.
நன்றி: webdunia
0 comments:
கருத்துரையிடுக