வெள்ளி, 16 ஏப்ரல், 2010
ஜி.எஸ்.எல்.வி.-டி3 கடலில் விழுந்தது: இஸ்ரோ
ஜிசாட்-4 செயற்கைக்கோளை புவி மைய சுழற்சிப் பாதையில் செலுத்த இந்திய க்ரையோஜெனிக் இயந்திரத்துடன் ஏவப்பட்ட ஜி.எஸ்.எல்.வி.-டி3 விண்கலம் பாதை மாறி கடலில் விழுந்ததென என இந்திய விணவெளி ஆய்வுக் கழகம் தெரிவித்துள்ளது.
ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவிலுள்ள சத்தீஸ் தவான் விண்னேவல் மையத்திலிருந்து இன்று மாலை 4.27 மணிக்கு விண்ணில் பாய்ந்த ஜி.எஸ்.எல்.வி.-டி3 விண்கலம் திட்டமிட்ட பாதையில் 293 நொடிகள் சரியாகப் பறந்து சென்றது.
விண்கலத்தின் முதலாவது, இரண்டாவது கட்டங்கள் சிறப்பாக செய்பட்டு விண்கலத்தை துல்லியமாக செலுத்தின. ஆனால், அதன் பிறகு க்ரையோஜெனிக் கட்டம் செயல்படத்துவங்க வேண்டும்.
ஆனால் அது சரியாக பற்றாத காரணத்தினால் விண்கலம் பாதை மாறியது. சிறிது நேரத்தில் கட்டுப்பாடு இழந்து கடலில் விழுந்ததென இஸ்ரோ கூறியுள்ளது.
இது தொடர்பாக இஸ்ரோ வெளியிட்டுள்ள அறிக்கையில், “திட்டமிட்டபடி இன்று மாலை 4.27 மணிக்கு ஜி.எஸ்.எல்.வி.- டி3 விண்கலம் விண்ணில் ஏவப்பட்டது. புறப்பட்ட 293 நொடிகள் வரை அதன் முதல் இரண்டு கட்டங்கள் முறையாக செயல்பட்டன.
அதன் பிறகு க்ரையோஜெனிக் கட்டம் இயங்கத் துவங்கி, 720 நொடிகள் விண்கலத்தை உரிய வேகத்திற்கு கொண்டு சென்று ஜிசாட்-4 செயற்கைக்கோளை புவி மைய சுழற்சிப் பாதையில் செலுத்தியிருக்க வேண்டும். ஆனால் க்ரையோஜெனிக் பற்றி செயல்படத் துவங்கியதா என்று தெரியவில்லை.
விண்கலம் பாதை மாறி, கீழ் நோக்கி பாய்ந்து இறுதியில் கடலில் விழுந்தது.
இந்தத் தோல்விக்கான சரியான காரணம் என்னவென்பதை அறிய விண்கலத்தின் தரவுகளை பகுப்பாய்வு செய்து வருகிறோம். அதிலிருந்து முறையான நடவடிக்கைகளை மேற்கொண்டு இன்னும் ஓராண்டுக் காலத்தில் நம்மால் தயாரிக்கப்படும் மேலும் ஒரு க்ரையோஜெனிக் இயந்திரத்தைப் பொறுத்தி அடுத்த திட்டத்தை நிறைவேற்றுவோம்” என்று அந்த அறிக்கையில் இஸ்ரோ தெரிவித்துள்ளது.
0 comments:
கருத்துரையிடுக