இந்த
நிலையில் அந்த நிறுவனத்தின் உரிமையாளர் ரவி, தங்களை ஏமாற்றி விட்டதாக, சென்னையைச்
சேர்ந்த சுரேஷ், தேனி பெரியகுளம் முருகன், நாகர்கோவில் பார்வதிபுரம், இலந்தையடி
பெர்லின் சுரேஷ், தோவாளை அழகிய பாண்டிபுரம் சுரேஷ், ரமேஷ், ஆரல்வாய்மொழி
செல்வகுமாரி, வெள்ளமடம் சுமித்விஜய், பூதபாண்டி எபனேசர், தாமரைகுளம் அருள்பேபி,
சுக்கான்கடை சதீஷ் ஆகியோர் தக்கலை போலீசில் புகார் செய்தனர்.
புகாரில்,
``துபாயில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி எங்களிடம் ரூ.25 ஆயிரம் வாங்கிக் கொண்டு
7.4.10 அன்று காலை 10 மணிக்கு தக்கலை அலுவலகத்துக்கு வரும்படி ரவி கூறினார். ஆனால்
அங்கு சென்று பார்த்தபோது, அலுவலகம் பூட்டப்பட்டிருந்தது. எங்களிடம் பணத்தைப்
பெற்றுக் கொண்டு நம்பிக்கை மோசடி செய்த ரவி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்று
கூறப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் சமீபத்தில் சென்னையில் பத்திரிகை
ஒன்றில் வந்த விளம்பரத்தை சென்னையைச் சேர்ந்த சுரேஷ் பார்த்தார். முன்பு வந்த
துபாய்க்கு ஆள் எடுக்கும் விளம்பரம் போலவே இருந்ததால் அவருக்கு சந்தேகம் எழுந்தது.
எனவே அதை விசாரித்து, முகவரியை தெரிந்து கொண்டார். தியாகராயநகர் உஸ்மான்சாலையில்
இந்தியன் டிராவல்ஸ் என்ற பெயரில் அந்த நிறுவனம் இருப்பதை அவர் அறிந்து கொண்டார்.
பின்னர், தக்கலையில் தன்னுடன் ஏமாற்றப்பட்ட அனைவருக்கும் போன் மூலம் சுரேஷ்
தகவல் கொடுத்தார். `நம்மை ஏமாற்றியவன் உஸ்மான் சாலையில் மீண்டும் கடை
விரித்திருக்கிறான், உடனே ஓடி வாருங்கள்' என்று அவர்களிடம் சுரேஷ் கூறியுள்ளார்.
தக்கலையில் ஏமாற்றப்பட்ட 36 பேரில் 15 பேர் அங்கிருந்து சென்னைக்கு நேற்று வந்தனர்.
சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் அவர்கள் புகார் கொடுத்தனர். மேலும்,
தக்கலையில் உள்ள நிறுவனம்தான் உஸ்மான் சாலையிலும் கிளை தொடங்கி இருக்கிறார்களா
என்பதை, அவர்கள் அங்குள்ள ஊழியர்களுக்கு செல்போன் மூலம் பேசி உறுதி செய்து, அந்த
பேச்சை ரகசியமாக பதிவு செய்து கொண்டனர். இந்த ஆதாரங்களுடன் புகார் கொடுக்கப்பட்டதை
அடுத்து, பாண்டிபஜார் போலீசார், விசாரணை மேற்கொண்டனர்.
இந்தியன் டிராவல்ஸ்
நிறுவனத்திலும் பலரிடம் நேர் காணல் நடத்தப்பட்டது தெரிய வந்தது. இங்கும் பலர் பணம்
கொடுத்த விவரமும் போலீசாருக்கு தெரிய வந்தது. அதைத் தொடர்ந்து அந்த நிறுவனத்தின்
மேலாளர் ரவியை போலீசார் பிடித்து விசாரித்து வருகின்றனர். தக்கலை போலீசில் புகார்
செய்யப்பட்டு இருப்பதால், அவரை தக்கலை போலீசாரிடம் ஒப்படைக்கப் போவதாக போலீசார்
தெரிவித்தனர்.
தக்கலை போலீசாருக்கு இதுபற்றி தகவல் அளிக்கப்பட்டது. எனவே
நேற்று மாலையில் தக்கலை போலீசார் புறப்பட்டு சென்னையை நோக்கி வந்து
கொண்டிருக்கின்றனர். போலீசாருடன் ஏற்கனவே ஏமாற்றப்பட்ட சிலரும் வருகின்றனர்.
நன்றி: குறிஞ்சிதமிழ்
0 comments:
கருத்துரையிடுக