வெள்ளி, 16 ஏப்ரல், 2010
சீனாவில் நிலநடுக்க பலி எண்ணிக்கை 620 ஆக உயர்வு
சீனாவின் வடமேற்கு மாகாணமான கின்காயில் ஏற்பட்ட கடும் நிலநடுக்கத்தால் உயிரிழந்தோர் எண்ணிக்கை 620 ஆக உயர்ந்துள்ளது.
சீனாவின் வட மேற்கு பகுதியில் உள்ள கின்காய் மாகாணத்தில் நேற்று பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 7.1 புள்ளிகளாக பதிவாகி இருந்தது.
இந்த நிலநடுக்கத்தால் கட்டிடங்கள், வீடுகள் இடிந்து நாசமாயின. இதில் சிக்கி 400க்கும் மேற்பட்டவர்கள் பலியானதாக தகவல் வெளியானது. மேலும் 10 ஆயிரத்துக்கும் அதிகமான பேர் காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் நிலநடுக்கத்திற்கு இதுவரை 620 பேர் பலியாகியுள்ளதாக சீன அரசு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
நிலநடுக்கம் ஏற்பட்டுள்ள மாகாணங்களில் இருந்த 85 சதவீத கட்டிடங்கள் தரைமட்டமாகியுள்ளதால் மக்கள் வீதிகளில் தஞ்சம் அடைந்துள்ளனர்.
பாதிக்கப்பட்ட மக்களுக்கு இருப்பிடம் மற்றும் உணவு போன்ற அடிப்படை வசதிகளை செய்து கொடுக்க சீனா அரசு சிறப்பு குழுக்களை அமைத்துள்ளது.
மேலும் இடிபாடுகளில் சிக்கியுள்ள ஆயிரக்கணக்கானோரை மீட்கும் பணி தொடர்ந்து நடந்து வருகின்றன.
0 comments:
கருத்துரையிடுக