வெள்ளி, 16 ஏப்ரல், 2010

ரூ. 99-க்கு 990 நிமிடங்கள் பேசலாம்: வீடியோகானின் புதிய திட்டம்

ரூ. 99-க்கு 990 நிமிடங்கள் பேசும் புதிய பிரீ-பெய்ட் திட்டத்தை வீடியோகான் மொபைல் சர்வீசஸ் நிறுவனம் தமிழகத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. ஒரு நிமிடத்துக்கு 10 பைசா என்று அளவில் இந்த சேவை அளிக்கப்படுகிறது. இதன் மூலம் பிரீ- பெய்ட் வாடிக்கையாளர்களுக்கு சராசரியாக 2 மடங்கு பேசும் நேரம் அதிகமாக கிடைக்கும்.இது குறித்து அந்நிறுவனத்தில் தமிழக பிரிவு முதன்மை செயல் அதிகாரி அரவிந்த சந்தானம் கூறியது, "பொதுவாக ரூ. 100-க்கும் குறைவான கட்டணத்தில் ஒரு முறை ரீ சார்ஜ் செய்து அதிக நேரம் பேசும் வாய்ப்பையே பெரும்பாலானவர்கள் விரும்புகிறார்கள்.இதனைக் கருத்தில் கொண்டு ரூ. 99-க்கு 990 நிமிடங்கள் என்று புதிய திட்டத்தை வீடியோகான் அறிமுகப்படுத்தியுள்ளது.
பல்வேறு தொலைபேசி சேவைகளை ஒப்பிடுகையில் இத்திட்டத்தில் வாடிக்கையாளர்களுக்கு இரண்டு மடங்கு பேசும் நேரம் கிடைக்கிறது. அதிகமாக செல்போனில் பேசுபவர்களின் மாதக் கட்டணம் இதன் மூலம் குறையும். முதல் எஸ்எம்எஸ்ஸýக்கு வழக்கமான கட்டணம், பின்னர் அனுப்பும் எஸ்எம்எஸ்களுக்கு தலா 1 பைசாவும் கட்டணம் வசூலிக்கப்படும். இதே போல மேலும் பல திட்டங்களையும் விரைவில் அறிவிக்க இருக்கிறோம் என்றார் அவர்.

0 comments:

கருத்துரையிடுக