சனி, 15 மே, 2010

மத்திய பிரதேசத்தில் மின் கம்பத்தில் பேருந்து மோதி 32 பேர் பலி

மத்திய பிரதேசதில் மின் கம்பத்தில் பேருந்து மோதி விபத்துக்குள்ளானதில் 32 பேர் பலியானார்கள். மத்திய பிரதேச மாநிலம் பந்தோரியில் இருந்து மண்லா பகுதிக்கு இன்று ஒரு பேருந்து சென்று கொண்டிருந்தது. அப்போது அந்த பேருந்து நிலை தடுமாறி சாலை ஓரத்தில் உள்ள மின் கம்பத்தில் மோதியது. இதில் அதிக மின் அழுத்தம் கொண்ட மின்சாரம் தாக்கி அந்த பேருந்தில் பயணம் செய்த 32 பேர் பலியானார்கள். இவர்கள் அனைவரும் மண்ட்ல பகுதிக்கு திருமண வீட்டிற்கு சென்றுகொண்டிருந்தனர்.காயமடைந்த அனைவரும் மண்ட்ல மாவட்ட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர் 

0 comments:

கருத்துரையிடுக