ஞாயிறு, 2 மே, 2010

மார்க்கச் சொற்பொழிவு: மரணம்



தலைப்பு:  மரணம்
உரை : மௌலவி யாஸிர் ஃபிர்தௌஸி (திருவை)
இடம்மர்கஸ் இப்ன் அல்-ஹத்தாப், பஹ்ரைன் (தாருல் குர்ஆன்)

அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்:
''உங்களில் ஒருவர் மரணத்தை விரும்ப வேண்டாம். மரணம் வேண்டி அதைக் கேட்டு பிரார்த்திக்க வேண்டாம். அவர் மரணித்து விட்டால், அவரின் செயல் அறுந்து விடும். நிச்சயமாக மூஃமினுக்கு அவனது வயது நல்லதையே அதிகப்படுத்தும்'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்றுக் கொடுத்தார்கள்.
அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்:
''உங்களில் ஒருவர், தனக்கு ஏற்பட்ட துன்பம் காரணமாக மரணத்தை விரும்ப வேண்டாம். அவருக்கு (மரணத்தை விரும்பும்) அவசியம் ஏற்பட்டால், 'இறைவா! உயிர் வாழ்வது, எனக்கு சிறப்பாக இருந்தால், என்னை உயிர் வாழச் செய்வாயாக! மரணம் எனக்கு சிறந்ததாக இருந்தால் என்னை மரணிக்கச் செய்வாயாக! என்று கூறட்டும்!'' என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)


0 comments:

கருத்துரையிடுக