இஸ்லாம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
இஸ்லாம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
சனி, 23 ஜூலை, 2011
நட்பும் அதன் ஒழுக்கமும்
பல நூறு நபர்களை சந்தித்துத்தாலும் சிலருடன்தான் நமக்கு அதிக நெருக்கமும் நட்பும் ஏற்படுகிறது. காரணம், இது அல்லாஹ்வே ஏற்படுத்தியுள்ள நியதி.
அறிமுகமாகிக் கொள்ளவேண்டும்
ஆத்மாக்கள் எல்லாம் குழுக்களாக பிரிக்கப்பட்ட படைகளாகும். அவற்றில் அறிமுகமாகிக் கொள்பவை இணைந்து கொள்கின்றன. அறிமுகமாகிக் கொள்ளாதவை வேறுபட்டு விடுகின்றன என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) அவர்கள், நூல்: புகாரீ 3088)
Labels:
இஸ்லாம்
வியாழன், 14 ஏப்ரல், 2011
பெண்களுக்கான இஸ்லாமியப் பயிற்சி முகாம்
இளைய பெண்கள் சமுதாயத்தினர் மத்தியில் ஒழுக்கம் மற்றும் விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் இன்ஷா அல்லாஹ் வரும் 16.04.2011 முதல் 15.05.2011 வரை ஒரு மாத காலம் கோட்டார் கதீஜதுல் குப்றா பெண்கள் கல்லூரியில் இஸ்லாமிய பயிற்சி முகாமுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பெற்றோர் தங்களின் பிள்ளைகளை அனுப்பி பயன் பெறுமாறு கேட்டு கொள்கிறோம் . குறிப்பு : பயிற்சியில் சேர்வதற்கு அடிப்படை தகுதியோ வயது வரம்போ கிடையாது.
Labels:
இஸ்லாம்
திங்கள், 6 டிசம்பர், 2010
ஆஷுரா நோன்பு (முஹர்ரம் மாத நோன்பு) - K.L.M. இப்ராஹீம் மதனீ
ஆஷுரா தினம் என்பது முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாளை குறிக்கும் வார்த்தையாகும். அதாவது முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாளில் மூஸா(அலை) அவர்களையும் அவர்களின் தோழர்களையும் அல்லாஹ் அவர்களின் பகைவன் ஃபிர்அவ்னிடமிருந்து கடலைப்பிளந்து பாதுகாத்து அதே கடலில் ஃபிர்அவ்னையும் அவனின் படைகளையும் அழித்த நாளாகும். அதற்கு நன்றி செலுத்தி மூஸா(அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள். அதை பின்பற்றி நபி(ஸல்) அவர்களும் நோன்பு நோற்றார்கள். தன் தோழர்களையும் நோற்கும்படி ஏவினார்கள். அதை நாமும் பின்பற்றி அந்த நாளில் நோன்பு நோற்பது சுன்னத்தாகும். யூதர்களுக்கு மாறுசெய்வதற்காக ஒன்பதாம் நாளையும் சேர்த்துக் கொள்வது சுன்னத்தாகும். அதாவது முஹர்ரம் மாதத்தின் ஒன்பது மற்றும் பத்தாம் நாட்களில் நோன்பு நோற்பது சுன்னத்தும் அதிகம் நன்மையை ஈட்டித்தரும் அமலுமாகும். இந்த நோன்பை நோற்பவரின் முன் சென்ற வருடத்தின் சிறு பாவங்கள் மன்னிக்கப்படும். இது சம்மந்தமான ஹதீதுகள் பின்வருமாறு.
Labels:
இஸ்லாம்
ஒரு கிராமமே இஸ்லாத்தைத் தழுவியது!
உண்மையான இறையச்சத்தோடு தியாகமும் தன்னார்வத் தொண்டும் எந்த சமுதாய மக்களால் அதிகமாக செய்யப்படுகிறதோ அவர்களை நோக்கி மக்கள் ஈர்க்கப்படுவார்கள். தியாக உள்ளத்தோடு செய்யப்பட்ட ஒரு மருத்துவத் தொண்டிற்கு இறைவன் அளித்த வெகுமதியைத்தான் இங்கே பார்க்கப் போகிறோம். ஆப்ரிக்காவின் மிகவும் பின்தங்கிய நாடுகளில் ஒன்றான கெமரூன் நாட்டின் வடமேற்கு மாகாணத்தில் உள்ள பபான்கி என்ற ஒரு கிராமம். கல்வியறிவோ, விழிப்புணர்வோ இல்லாத பழங்குடி மக்கள் வாழும் ஊர் அது. அந்த கிராமத்தில் ஏழ்மையில் வாடிய ஒரு பெண்ணுக்குப் பிறந்த இரட்டைக் குழந்தைகள் ஒன்றோடு ஒன்று தாறுமாறாக ஒட்டிக் கொண்டு பிறந்தது. அந்தக் குழந்தைகளைப் பராமரிக்க இயலாமல் தாய் மிகவும் சிரமப்பட்டார். மேலும் அது சைத்தானின் பிள்ளைகள் என்று அந்த கிராம மக்கள் தூற்றி வந்தனர்.
Labels:
இஸ்லாம்
வெள்ளி, 3 செப்டம்பர், 2010
லைலத்துல் கத்ரின் சிறப்புகள்
மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனீ
நிச்சயமாக நாம் அதை (குர்ஆனை) கண்ணியமிக்க (லைலத்துல் கத்ர்) என்ற இரவில் இறக்கினோம். மேலும் கண்ணியமிக்க இரவு என்ன என்பதை உமக்கு அறிவித்தது எது? கண்ணியமிக்க(அந்த) இரவு ஆயிரம் மாதங்களை விட மிக்க மேலானதாகும். அதில் மலக்குகளும், ஆன்மாவும் (ஜிப்ரயீலும்) தம் இறைவனின் கட்டளையின் படி (நடைபெற வேண்டிய) சகல காரியங்களுடன் இறங்குகின்றனர். சாந்தி (நிலவியிருக்கும்) அது விடியற்காலை உதயமாகும் வரை இருக்கும். (அல்குர்ஆன் 97:1,5)
Labels:
இஸ்லாம்
வெள்ளி, 27 ஆகஸ்ட், 2010
ஓடிப்போகும் முஸ்லிம் பெண்கள்!!! ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்
இன்றைய சூழ்நிலையில் நமது சமதாயம் விழிப்புணர்வுடன் இருக்க பல்வேறு இணையதளத்திலும் , ஈமெயிலிலும் வந்த பல செய்தி/ கட்டுரைகளை இங்கே சமர்ப்பித்துள்ளோம். இதனை அனைவருக்கும் எத்தி வைக்க இறைவனுக்காக கேட்டுக்கொள்கிறோம்.
பள்ளி மற்றும் கல்லூரிகளில், பயிலும் நமது இஸ்லாமிய
சகோதரிகளிடம் கனிவாகப்பேசி, காதல் வயப்படுத்தி காபிர்களாக ஆக்க வேண்டும்.
வாழ்வை நாசமாக்க வேண்டும் என்ற எண்ணத்தில் கயவர் கூட்டங்கள் நீண்ட
சதியின் அடிப்படையில் செயல்பட்டு வருவது தாங்கள் அறிந்த ஒன்றே.
தற்பொழுது இந்த சதிவேலை பெருகி வருகின்றது என்பதனை ஒரு எச்சரிக்கையாக
உங்களுக்கு தெரியப்படுத்திக் கொள்கிறோம். சமீபத்தில் இந்து முன்ணனி தலைவர் இராமகோபாலன்
"ஒரு முஸ்லிம் பெண்னை காதலித்து, ஹிந்துவாக்கி மணம் புரியும் ஆணுக்கு 1 லட்சம் ரூபாய் பரிசு" என அறிவித்துள்ளான். அத்துடன் எப்படி முஸ்லிம் பெண்களை தங்கள் காதல்
வலையில் வீழ்த்தி அவர்களின் கற்பை சூறையாடுவது என்ற பயிற்சியும் இந்து
இளைஞர்களுக்கு அளிக்கப்பட்டு வருகின்றது.
இதன் எதிரொலியாக தமிழகம் முழுவதும் என்றுமில்லாத வகையில் தற்சமயம் அதிக
அளவில் முஸ்லிம் பெண்கள் முஸ்லிம் அல்லாத ஆடவருடன் ஓடிப்போவதும், மதம்
மாறுவதும் நிகழ்ந்து வருகின்றது.
Labels:
இஸ்லாம்
வியாழன், 1 ஜூலை, 2010
கற்பொழுக்கம் ஆண்களுக்கும் அவசியம்!
--மவ்லவி
கே.எஸ்.ஸிராஜுத்தீன், காஷிஃபி
[
''தங்களின் மறைவிடங்களை பாதுகாத்துக்கொள்ளும் ஆண்களுக்கும்,
பாதுகாத்துக்கொள்ளும் பெண்களுக்கும்''
என்று தனது
திருமறையில் கூறுவதின் மூலம் கற்பொழுக்கம் ஆண் - பெண் இருபாலருக்கும் அவசியம் என்பதை அல்லாஹ்
வலியுறுத்துகிறான். அதிலும் பெண்களுக்கு முன்பாக ஆண்களை
குறிப்பிடுகிறான் என்பதை ஆண்கள்
கவனிக்கவும்.
''உலக அழிவு நாளை
நெருங்கிவிட்ட நிலையில் இஸ்லாமிய பெண்களிடம் வெட்கமில்லை,
பர்தா இல்லை, தெருக்களுக்கு
வந்துவிட்டார்கள்'' என்றெல்லாம் கூறி பெண்களின் நிலையை மட்டும் பேசி விட்டு ஆண்கள் தங்களது
கற்பை மறந்து வாழ்வது சரியல்ல. நியாயமும் அல்ல.
பார்வையை பேணுவதற்காக பொது இடங்களில் அமருவதை விட்டும் ஸஹாபாக்களை
நபிகளார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் தடுத்தார்கள். நிர்பந்தமாக அமர வேண்டிய சூழ்நிலை ஏற்பட்டால்
பார்வையை தாழ்த்திக்கொண்டு அமருங்கள் என் கட்டளையிட்டார்கள்.
அனேகமாக
இன்று பெரும்பாலான ஆண்கள் இதற்கு நேர்மாறாகத்தானே நடக்கிறார்கள்.
பெண்களுடைய ஒழுக்கம் பற்றி பேசக்கூடிய இவர்களில் எத்தனை பேர் பெண்கள்
எதிரில் வரும்பொழுது பார்வையை தாழ்த்திக்
கொள்கிறார்கள்!
இருசராருக்கும் கற்புண்டு என்பதை
ஏற்றுக்கொள்ளும்போது கற்பின் ஒழுக்கமும் இருசாராருக்கும்தான்! பெண்ணுக்கு மட்டுமல்ல என்பதை ஆண்கள் உணர வேண்டும்.]
o அதிகாரம் படைத்த ஆண்கள் எந்த விஷயத்திலும்
பெண்களிலேயே குறை காண்பார்கள். ஆனால் தங்களை வசதியாக மறந்து
விடுவார்கள்.
o
அந்நிய ஆண்கள் இருக்குமிடத்திற்கு பெண்கள் செல்வதை
குறையாக காண்பவர்கள் அந்நியப் பெண்கள் இருக்கும் இடத்திற்கு இவர்கள் செல்வதை
குறையாக எண்ண மாட்டார்கள்.
o
அந்நிய ஆண் பார்க்கும் விதத்தில் பெண் முகம் திறந்து
செல்வதை குறை சொல்பவர்கள், அந்நியப் பெண்களை இவர்கள் பார்ப்பதை
குறையாக நினைக்க மாட்டார்கள்.
o
அந்நிய ஆணிடத்தில் பெண் பேசுவதை குறை பார்ப்பவர்கள்
அந்நிய பெண்ணிடத்தில் இவர்கள் பேசுவார்கள்.
Labels:
இஸ்லாம்
வெள்ளி, 11 ஜூன், 2010
தொலைபேசியும் இஸ்லாமிய பெண்களும் - முஸ்லிம் பெற்றோர் கவனதிற்கு!
முஸ்லிம் பெற்றோர்களே, சகோதரர்களே! உங்கள் பெண் குழந்தைகளயும், நம் சகோதரிகளை நாம் பாதுகாத்து சொர்க்கம் கொண்டு செல்வதும், கயவர் கூட்டத்தின் சதியை முறியடிப்பதும், நமது கடமையாக இருக்கின்றது. இதனை நாம் காலம் தாழ்த்தாமல் உடனே செய்ய வேண்டும். தற்சமயம் அதிக அளவில் முஸ்லிம் பெண்கள் முஸ்லிம் அல்லாத ஆடவருடன் ஓடிப்போவதும், மதம் மாறுவதும் நிகழ்ந்து வருகின்றது. இதற்கான முழுப்பொறுப்பையும் பெற்றோர் ஏற்க வேண்டி இருக்கிறது. இது போன்ற சம்பவங்கள் நிகழ்வதற்கான காரணிகள்:
Labels:
இஸ்லாம்
செவ்வாய், 18 மே, 2010
ஷரீஆவின் கண்ணோட்டத்தில் மனைவியைத் தண்டித்தல்.
பெண்கள் பாரிய குடும்ப வன்முறைகளைச் சந்தித்து வருகின்றனர். அறிவியலிலும், நாகரிகத்திலும்(?) முன்னேற்றம் கண்ட நாடுகளில் கூட பெண்கள் தமது கணவர்களினால் வைத்தியசாலையில் அனுமதிக்கப்படும் அளவுக்கு வன்முறைக்குள்ளாக்கப்படுகின்றனர். சில ஆய்வுகள் 80 வீதமான பெண்கள் தமது கணவர்களினால் பெரியளவோ, சிரியளவோ வன்முறைக்குள்ளப்படுவதாகக் கூறுகின்றது. குடிகாரக் கணவர்களினால் மட்டுமன்றிப் படித்தவர்கள், பண்பட்டவர்கள், உயர் அரச உத்தியோகத்தினரால் கூட மனைவியர் மாடுகளைப் போன்று தண்டிக்கப்படுகின்றனர். இது குறித்த இஸ்லாத்தின் நிலைப்பாட்டை இவ்வாக்கத்தினூடாகத் தெளிவுபடுத்த விரும்புகின்றோம்.
Labels:
இஸ்லாம்
ஞாயிறு, 2 மே, 2010
மார்க்கச் சொற்பொழிவு: மரணம்
தலைப்பு: மரணம்
உரை : மௌலவி யாஸிர் ஃபிர்தௌஸி (திருவை)
இடம்: மர்கஸ் இப்ன் அல்-ஹத்தாப், பஹ்ரைன் (தாருல் குர்ஆன்)
அபூஹுரைரா ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்:
''உங்களில் ஒருவர் மரணத்தை விரும்ப வேண்டாம். மரணம் வேண்டி அதைக் கேட்டு பிரார்த்திக்க வேண்டாம். அவர் மரணித்து விட்டால், அவரின் செயல் அறுந்து விடும். நிச்சயமாக மூஃமினுக்கு அவனது வயது நல்லதையே அதிகப்படுத்தும்'' என்று நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கற்றுக் கொடுத்தார்கள்.
அனஸ் ரளியல்லாஹு அன்ஹு அறிவிக்கின்றார்கள்:
''உங்களில் ஒருவர், தனக்கு ஏற்பட்ட துன்பம் காரணமாக மரணத்தை விரும்ப வேண்டாம். அவருக்கு (மரணத்தை விரும்பும்) அவசியம் ஏற்பட்டால், 'இறைவா! உயிர் வாழ்வது, எனக்கு சிறப்பாக இருந்தால், என்னை உயிர் வாழச் செய்வாயாக! மரணம் எனக்கு சிறந்ததாக இருந்தால் என்னை மரணிக்கச் செய்வாயாக! என்று கூறட்டும்!'' என நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள். (புகாரி, முஸ்லிம்)
Labels:
ஆடியோ,
இஸ்லாம்,
மார்க்க உரை
ஞாயிறு, 11 ஏப்ரல், 2010
ஸஹீஹு ல் புகாரி தமிழாக்கம்: 7 பாகமும் இணைந்தது
ஹாரிஸ் இப்னு ‘ஹிஷாம்(ரலி) நபி(ஸல்) அவர்களிடம், நபி அவர்களே! தங்களுக்கு இறைச்செய்தி எவ்வாறு வருகிறது? எனக் கேட்டதற்கு, சில வேளைகளில் அது மணி ஓசையைப் போன்று என்னிடம் வரும். அவ்வாறு வருவது எனக்கு மிகக் கடினமாக இருக்கும். அவர் (வானவர்) கூறியதை நான் நினைவுபடுத்திய நிலையில் அவர் என்னைவிட்டுப் பிரிந்துவிடுவார்.
மேலும் சில வேளைகளில் அ(வ்வான)வர் ஓர் ஆடவர் போன்று எனக்குக் காட்சியளித்து, என்னுடன் உரையாடுவார். அப்போது அவர் கூறுவதை நினைவிலிருத்திக் கொள்வேன் என்று நபி(ஸல்) கூறினார்கள் என ஆயிஷா(ரலி) குறிப்பிட்டார்.
மேலும், கடும் குளிரான நாள்களில் நபி(ஸல்) அவர்களுக்கு வஹி (இறைச்செய்தி) இறங்குவதை கண்டேன். அவர் (வானவர்) நபி(ஸல்) அவர்களைவிட்டு விலகிச் செல்லும்போது (குளிரிலும்) அவர்களின் நெற்றியிலிருந்து வியர்வை சொட்டும் என ஆயிஷா(ரலி) கூறினார். (நூல்: புகாரி )
இந்நூலினை தமிழில் மொழி பெயர்த்தவர்களுக்காகவும் PDF முறையில் அமைத்து வெளியிட்ட அனைவருக்காகவும் பிரார்த்தனை செய்தவண்ணம் இங்கே கிளிக் செய்து பதிவிறக்கம் செய்துக் கொள்ளுங்கள்.
Labels:
இஸ்லாம்,
ஸஹீஹு ல் புகாரி
சனி, 20 மார்ச், 2010
Daniel Streich நேற்று இஸ்லாத்தின் எதிரி இன்று இஸ்லாத்தின் காவலன்
சுவிட்சர்லாந்து நாட்டில் மஸ்ஜிதுகளில் கட்டப்படும் மினாராக்களுக்கு எதிரானபிரச்சாரத்திற்கு தலைமை வகித்த சுவிஸ் நாட்டின் அரசியல் தலைவர் டானியல் ஸ்ட்ரீக் – Daniel Streich- சுவிஸ் நாட்டில் மினாராக்கள் கட்டுவதை தடை செய்ய முழு காரணமாக இருந்த சுவிஸ் மக்கள் கட்சியின் முக்கிய உறுப்பினர் இஸ்லாத்தை தழுவியதாக செய்திகள் வெளிவந்தன எனிலும் அதுபற்றிய மாறுபட்ட கருத்துகள் வெளிவந்தமையால் அந்த செய்தியை நாம் உடனடியாக தரவில்லை ஆனால் இப்போது .அவர் நேரடியாக சுவிட்சர்லாந்து தொலைக்காட்சியில் தோன்றி தான் இஸ்லாத்தை ஏற்றத்தையும் அதற்கான காரணத்தையும் கூறியுள்ளார்.
Labels:
இஸ்லாம்
ஞாயிறு, 6 செப்டம்பர், 2009
பத்ர் தரும் படிப்பினைகள்

இஸ்லாமிய எழுச்சியின் மைல்கல்லாகத் திகழ்ந்த தியாக நிகழ்ச்சியே ‘பத்ர்’ப் போராகும். போதிய முன்னேற்பாடுகள் இல்லாத சுமார் 313 பேர்கள், 1000 பேர் கொண்ட யுத்த படையை களத்தில் எதிர் கொண்டு ஈமானிய பலத்தாலும், தியாக குணத்தாலும் அல்லாஹ்வின் உதவியைப் பெற்று சிதறடித்த நிகழ்ச்சி அதுவாகும். இந்த ‘பத்ர்’ போர் வரலாற்றின் மூலம் நாங்கள் வேறு படிப்பினைகளைப் பெறலாம். அவற்றைச் சுருக்கமாக முன்வைப்பதே இவ்வாக்கத்தின் நோக்கமாகும்.
சுருக்கமான தகவல்
(ஹிஜ்ரி 2-ஆம் ஆண்டு ரமளான் பிறை 17-ல் நடந்த) ‘பத்ர்’ போர் குறித்த ஒரு சுருக்கமான தகவலை முதலில் முன்வைப்பது பொருத்தமென நினைக்கின்றேன். அபூ சுப்யான் மிகப் பெரும் வர்த்தகப் பொருட்களுடன் மதீனாவை அண்டிய பகுதியால் வருகின்றார் என்ற செய்தி நபி(ஸல்) அவர்களுக்குக் கிடைக்கின்றது.
சனி, 29 ஆகஸ்ட், 2009
செவ்வாய், 25 ஆகஸ்ட், 2009
திங்கள், 24 ஆகஸ்ட், 2009
தேர்ந்தெடுக்கப்பட்ட சிறந்த பிரார்த்தனைகள்
தொகுத்தவர்: மௌலவி K.L.M.இப்ராஹீம் மதனி
1. யா அல்லாஹ்! எனது மார்க்கத்திலும் எனது உலக வாழ்விலும் எனது குடும்பத்திலும் எனது செல்வத்திலும் மன்னிப்பையும் நலனையும் நான் உன்னிடம் கேட்கின்றேன். யாஅல்லாஹ்! என்னுடைய குறைகளை மறைப்பாயாக! யாஅல்லாஹ்! என் அச்சங்களை அகற்றி எனக்கு அமைதியைத் தருவாயாக! யாஅல்லாஹ்! எனக்கு முன்னாலிருந்தும் பின்னாலிருந்தும் எனது வலதுபுறமிருந்தும் இடதுபுறமிருந்தும் எனக்கு மேலிருந்தும் எனக்குப் பாதுகாப்பு அளிப்பாயாக! எனக்கு கீழ்புறத்திலிருந்து நான் எதிர்பாராத விதமாகக் கொல்லப்படுவதை உன் வல்லமையைக் கொண்டு நான் உன்னிடம் பாதுகாப்புத் தேடுகின்றேன்.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யவும்.
Labels:
இஸ்லாம்,
பிரார்த்தனை
சனி, 22 ஆகஸ்ட், 2009
பிரான்சு நாட்டில் இஸ்லாத்தின் வளர்ச்சி கண்டு பதறிப்போன அதிபர் சர்கோசி
உடலை மூடி இருக்கும் நீச்சல் உடைக்கு பிரான்ஸ் நீச்சல் தடாகத்தில் தடை:
பிரான்ஸ் நாட்டில் இஸ்லாத்தின் வளர்ச்சி கண்டு பதறிப்போன சர்கோசி பெண்கள் இஸ்லாமிய உடை அணிவது பெண்ணடிமைத்தனத்தை காட்டுவதாக கூறினார் அது சர்ச்சையானது. இப்போது முஸ்லிம் பெண்கள் அணியும் `பர்க்கினி’ Burkini நீச்சல் உடை மீது சர்ச்சையை கிளப்பி உள்ளனர் . பர்க்கினி என்பது முஸ்லிம் பெண்கள் முழுவதும் உடலை மறைத்து கொண்டு நீந்துவதற்கு அணியும் நீச்சல் உடை ஆகும். இந்த உடையை அணிந்துகொண்டு ஒரு முஸ்லிம் பெண் கரோல் என்ற இஸ்லாத்தை தழுவிய பிரான்ஸ் பெண் ஒரு நீச்சல் குளத்துக்கு சென்றபோது அங்கு இருந்த ஊழியர் அவர் நுழைவதற்கு தடை விதித்தார் இதற்கான அடிப்படை காரணம் இஸ்லாம் மிக வேகமாக வளரும் கண்டமாக ஐரோப்பாவும் இஸ்லாம் மிக வேகமாக வளரும் நாடு பிரான்சுமாகும்.
Carole கரோல் என்ற இஸ்லாத்தை தழுவிய பிரான்ஸ் பெண்
பர்கா உடை பிரான்ஸ் நாட்டில் வரவேற்கத்தக்கது அல்ல’ என்று அதிபர் சர்கோசி கூறியதை தொடர்ந்து, அந்த உடைக்கு தடை விதிக்கலாமா? என்பது பற்றி கோர்ட்டில் விசாரணை நடந்து வருகிறது. இந்த நிலையில் தான் பர்க்கினி’ உடை அணிந்து கொண்டு ஒரு பெண் பாரிஸ் நகரில் உள்ள எமெரய்ன்வில்லே என்ற இடத்தில் உள்ள ஒரு நீச்சல் குளத்துக்கு சென்றபோது அவருக்கு அனுமதி மறுக்கப்பட்டது. முழுவதும் உடை அணிந்து நீந்தக்கூடாது என்று அனுமதி மறுத்து விட்டனர். இதை தொடர்ந்து கரோல் என்ற இஸ்லாத்தை தழுவிய பிரான்ச் பெண் கோர்ட்டில் வழக்கு தொடரப்போவதாக கூறி இருக்கிறார்.
புதன், 12 ஆகஸ்ட், 2009
ரமளான் : கண்ணியமிக்க விருந்தாளி
உன்னதமான பருவகாலம்
இது ஒரு உன்னதமான பருவகாலமாகும். இம்மாதத்தில் அல்லாஹ் ஏராளமான கூலிகளை வழங்குகின்றான். ஏராளமான அருட்கொடைகளை அளிக்கின்றான். இது நன்மைகள் மற்றும் அருட்கொடைகளின் மாதம். வெகுமதிகள் மற்றும் அன்பளிப்புகளின் மாதம்.
இந்த மாதத்தைப் பற்றி இறைவன் தன்னுடைய திருமறையிலே கூறுகின்றான்:
ரமளான் மாதம் எத்தகையதெனில் அதில் தான் மனிதர்களுக்கு (முழுமையான) வழிகாட்டியாகவும் நேர்வழியின் தெளிவான அறிவுரைகளைக் கொண்டதாகவும், சத்தியத்தையும் அசத்தியத்தையும் பிரித்துக் காட்டக் கூடியதாகவும் உள்ள குர்ஆன் இறக்கியருளப்பட்டது.
இதையே இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறுகின்றார்கள் :
இறையருளும் பாவமன்னிப்பும், நரகத்திலிருந்து விடுதலையும் சூழ்ந்திருக்கும் மாதம். ஆம், இம்மாதத்தின் ஆரம்பம் அருள்மிக்கதாகவும் நடுப்பகுதி பாவமன்னிப்பை வழங்கக் கூடியதாகவும், இறுதிப் பகுதி நரக நெருப்பிலிருந்து விடுதலை செய்யக் கூடியதாகவும் உள்ளது.
மேலும், ரமளான் மாதம் வந்து விட்டால் சொர்க்கத்தின் வாயில்கள் திறக்கப்படுகின்றன. நரகத்தின் வாயில்கள் அடைக்கப்படுகின்றன. மேலும், ஷைத்தான்களுக்கு விலங்கிடப்படுகின்றது (நூல் : புகாரி )
மனைவியை மகிழ்விப்பது எப்படி?
(குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் நிழலில்)
அழகிய வரவேற்பு
- வேலையிலிருந்தோ, வெளியூர் பயணத்திலிருந்தோ அல்லது எங்கிருந்து வீட்டுக்கு வந்தாலும் நல்ல வாழ்த்துக்களைத் தெரிவித்தவாறு வீட்டில் நுழையுங்கள்.
- மலர்ந்த முகத்துடன் ஸலாம் சொன்னவாறு மனைவியைச் சந்தியுங்கள். ஸலாம் சொல்வது நபிமொழி மட்டுமல்லாது உங்கள் மனைவிக்கு நீங்கள் செய்யும் பிரார்த்தனையும் கூட.
- அவளுடைய கைகளைப் பற்றி குலுக்கி 'முஸாபஹா' செய்யலாம். வெளியில் சந்தித்த நல்ல செய்திகiளைத் தெரிவித்துவிட்டு மற்ற செய்திகளை வேறு சந்தர்ப்பத்திற்காக தள்ளி வையுங்கள்.
தொடர்ந்து படிக்க இங்கே கிளிக் செய்யவும்
ஞாயிறு, 9 ஆகஸ்ட், 2009
சுவனப்பாதை மாத இதழ் நடத்தும் உலகளாவிய கட்டுரைப் போட்டி
ஸனாயிய்யா – ஜித்தா, சவூதி அரேபியா
சவுதி ரியால் 1500க்கு, மதிப்புள்ள முதல் மூன்று பரிசுகள் மற்றும் பத்துக்கும் மேற்பட்ட ஆறுதல் பரிசுகள்.
மேலும் தலைப்புகள் மற்றும் விதிமுறைகள் பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும்.
சவுதி ரியால் 1500க்கு, மதிப்புள்ள முதல் மூன்று பரிசுகள் மற்றும் பத்துக்கும் மேற்பட்ட ஆறுதல் பரிசுகள்.
மேலும் தலைப்புகள் மற்றும் விதிமுறைகள் பற்றி அறிய இங்கே கிளிக் செய்யவும்.






