ஞாயிறு, 16 மே, 2010
பாபர் மசூதி இடிப்பு வழக்கு : பெண் ஐபிஎஸ் சாட்சியம்
பாபர் மசூதி இடிக்கப்பட்ட
தினத்தில் அத்வானி உள்ளிட்டோர் பேசிக் கொண்டிருந்த மேடையில் இருந்து வினய்
கத்தியார் தன்னை இருமுறை கீழே அனுப்பினார் என்று சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் பெண்
ஐபிஎஸ் அதிகாரி அஞ்சு குப்தா கூறியுள்ளார்.
பாபர் மசூதியை இடிக்கத் தூண்டும்
அளவுக்கு அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் பேசினார் என்று இவர் முன்னதாக நீதிமன்றத்தில்
சாட்சியம் அளித்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பாபர் மசூதி இடிப்பின்போது அஞ்சு,
அத்வானியின் பாதுகாப்பு அதிகாரியாக பணியாற்றினார் என்பது
குறிப்பிடத்தக்கது.
1992-ல் பாபர் மசூதி இடிக்கப்பட்ட
வழக்கு சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. இதில் சனிக்கிழமை
நீதிமன்றத்தில் ஆஜரானார். அவரிடம் எதிர்தரப்பு வழக்கறிஞர் எச்.டி. சர்மா, நீங்கள்
எவ்வளவு நேரம் மேடையில் இருந்தீர்கள் என்று எழுப்பினர்.
அதற்கு அஞ்சு குப்தா, பாபர்
மசூதி இடிப்பு தினத்தன்று ஒரு சில நிமிஷங்கள் மட்டுமே அப்பகுதியில்
அமைக்கப்பட்டிருந்த மேடையில் இருந்தேன். அன்றுதான் முதல் முறையாக அங்கு
சென்றேன்.
பின்னர் நான் திரும்பவும் மேடைக்கு
வந்த போது, அத்வானியின் காரை மேடைக்கு அருகில் கொண்டு வாருங்கள், கூட்டம் அதிகம்
இருப்பதால் அவர் கார் இருக்கும் இடம் வரை நடந்து செல்வது கடினம்
என்றார்.
அப்போது குறுக்கிட்ட வழக்கறிஞர்
சர்மா, அப்போதுதான் கரசேவகர்கள் எவ்வாறு செயல்பட வேண்டும் என்று தலைவர்கள் பேசியதை
நீங்கள் கேட்டீர்களா? என்று கேள்வி எழுப்பினார்.
தலைவர் பேசிக்கொண்டிருந்த போதுதான்
மீண்டும் மேடைக்குச் சென்றேன். அதனைத் தொடர்ந்து கோஷங்கள் எழுப்பப்பட்டன. நான்
போலீஸ் கட்டுப்பாட்டு அறைக்குச் சென்றபோது மேடையில் இருந்த தலைவர்கள் பேசியதை நான்
கேட்கவில்லை.
ராமஜென்ம பூமி என்று கூறப்படும்
இடத்துக்கு காலை 10.15-க்குச் சென்றேன். அப்போது நூற்றுக்கணக்கான மக்கள் அங்கு
கூடியிருந்தனர். அப்போது சாமியார்கள் போன்று தோற்றமளித்த சிலர் மதச்சடங்குகளை அங்கு
நிறைவேற்றிக் கொண்டிருந்தனர் என்றார் அஞ்சு.
அப்போது கண்காணிப்பாளர்களுடன்
மேற்பார்வையில் கரசேவகர்களை அங்கு அனுமதிக்கலாம் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவு
குறித்து அப்போது உங்களுக்குத் தெரியுமா என்று வழக்கறிஞர் கேட்டார்.
இதற்கு, பிரச்னைக்குரிய
இடத்தில் கோயில் கட்ட கரசேவகர்களை அனுமதிக்கக் கூடாது என்ற உச்ச நீதிமன்றத்தின்
உத்தரவு மட்டும் எனக்குத் தெரியும்' என்று அஞ்சு குப்தா பதிலளித்தார்.
சுமார் 2 மணிநேரம் இந்த
குறுக்கு விசாரணை நடைபெற்றது. பின்னர் அஞ்சுவுடனான குறுக்கு விசாரணையை ஜூன்
3-ம் தேதிக்கு நீதிபதி ஒத்தி வைத்தார்.
0 comments:
கருத்துரையிடுக