சனி, 27 நவம்பர், 2010
அண்ணா பஸ் நிலைய சீரமைப்புப் பணிகள் 4 மாதங்களில் முடியும்,
நாகர்கோவில் அண்ணா பஸ் நிலைய சீரமைப்புப் பணிகள் 4 மாதங்களில் நிறைவடையும் என
நகர்மன்றத் தலைவர் அசோகன் சாலமன் தெரிவித்தார். ரூ.1.29 கோடியில் இந்த பஸ் நிலையம் சீரமைக்கப்படுகிறது. இந்த சீரமைப்புப்
பணிகள் தற்போது தொடங்கி நடைபெறுகின்றன. பஸ் நிலைய தரைத்தளத்தில் எந்திரங்கள் மூலம் துளையிட்டு சுண்ணாப்பு கரைசல்
ஊற்றும் பணி நடந்து வருகிறது. இதனால் கான்கிரீட் தளம் அமைக்கும்போது நிலப்பகுதியில் தண்ணீர் தேங்குவது
தடுக்கப்படும் என்று பணியாளர்கள் தெரிவித்தனர். இந்நிலையில் இந்த பணியை வியாழக்கிழமை பார்வையிட்டு ஆய்வு செய்த அசோகன்
சாலமன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
அண்ணா பஸ் நிலைய சீரமைப்புப் பணிகள் தொடங்கி முழு வீச்சில் நடைபெற்று
வருகின்றன. இன்னும் 4 மாதங்களில் பணிகள் முடிவடையும் என்று ஒப்பந்தக்காரர்
தெரிவித்துள்ளார். பஸ் நிலைய தரைத்தளம் ஒன்றரை அடி முதல் 2 அடி வரை
உயர்த்தப்படுகிறது. இதனால் பஸ் நிலையம் புதுப்பொலிவு பெறும் என்றார் அவர். நகர்மன்ற துணைத் தலைவர் சைமன்ராஜ், ஒப்பந்தக்காரர் கிளீட்டஸ், நகராட்சிப்
பொறியாளர் தாமஸ் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனர்.
0 comments:
கருத்துரையிடுக