சனி, 27 நவம்பர், 2010
கல்லூரி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ தெரிவித்துள்ளார்.
கல்லூரி மாணவர்களுக்கான கல்வி உதவித்தொகை அனுமதிக்கப்பட்டுள்ளதாக ஆட்சியர் ராஜேந்திர ரத்னூ தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து திங்கள்கிழமை அவர் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
கன்னியாகுமரி மாவட்டத்திலுள்ள அரசு, அரசு உதவிபெறும் கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், பொறியியல், மருத்துவம், ஆசிரியர் பயிற்சி நிறுவனங்களில் கல்வி பயிலும் பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் இனங்களைச் சேர்ந்த மாணவ, மாணவிகளுக்கு கடந்த கல்வியாண்டைப்போல் இக் கல்வியாண்டிலும் கல்வி உதவித்தொகைகள் அனுமதிக்கப்பட்டுள்ளன. அதற்கான காசோலைகள், அந்தந்த கல்லூரி முதல்வர்களுக்கு ஏற்கெனவே வழங்கப்பட்டுவிட்டன. எனவே, கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் தங்களுக்கான கல்வி உதவித்தொகைக்கு உரிய காசோலையை தாங்கள் கல்வி பயிலும் கல்லூரியிலிருந்து பெற்று பயனடையலாம் என்றார் அவர்.
0 comments:
கருத்துரையிடுக