புதன், 24 நவம்பர், 2010

பார்வதிபுரத்தில் ரயில்நிலையம் அமைக்க ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது.


திருவனந்தபுரம் கோட்ட ரயில்வே பயனீட்டாளர்கள் ஆலோ சனை கமிட்டி கூட்டம் நேற்று திருவனந்தபுரத்தில் நடந்தது. திருவனந்தபுரம் ரயில்வே கோட்ட மேலாளர் ராஜீவ்தத் சர்மா தலைமை வகித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது: தென்னக ரயில்வேயில் சென்னை கோட்டத்திற்கு அடுத்த படியாக திருவனந்தபுரம் கோட்டத்திற்கு தான் அதிக வருவாய் கிடைக்கிறது. தினமும் 3 லட்சம் பயணிகள் இந்த கோட்டத்தை பயன்படுத்து கிறார்கள். கடந்த ஏப்ரல் மாதம் முதல் அக் டோபர் வரை 340.04கோடி வருமானம் கிடைத்துள்ளது. இது முந்தைய வருடத்தை விட 9.13 சத வீதம் அதிகமாகும். நாகர்கோவில் ரயில்நிலையத்தில் கூடுதல் வசதிகள் செய்யப்பட உள்ளது. இங்கு நில பற்றாக்குறை இருப்பதால், கூடுதல் நிலம் கிடைக்கும் பட்சத்தில் பிட்லைன் போன்ற வசதிகள் ஏற்படுத்தப்படும். பார்வதிபுரத்தில் ரயில்நிலையம் அமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடந்து வருகிறது. திட்டத்திற்கு ஒப்புதல் கிடைக்கும் பட்சத்தில் உடன டியாக பணிகள் தொடங்கும் என்றார். திருவனந்தபுரத்தில் கோட்ட ரயில்வே பயனீட்டாளர்கள் ஆலோசனை கமிட்டி கூட்டம் கோட்ட மேலாளர் ராஜீவ் தத் சர்மா தலைமையில் நடந்தது. 

0 comments:

கருத்துரையிடுக