வெள்ளி, 19 நவம்பர், 2010

பால் வீதிக்கு வெளியே ஒருகோள் கண்டுபிடிப்பு


வான்வெளியில் நமது சூரிய குடும்பத்தை தவிர ஏராளமான சூரிய குடும்பங்கள் உள்ளன. இதுவரை நமது பால் வீதியில் மட்டும் 500-க்கும் மேற்பட்ட சூரிய குடும்பங்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். இப்போது பால் வீதிக்கு வெளியே ஒருகோளை சிலி நாட்டில் அமைக்கப்பட்டுள்ள “டெலஸ்கோப்” மூலம் கண்டுபிடித்துள்ளனர். இது பால் வீதிக்கு வெளியே உள்ள சூரிய குடும்பத்தை சேர்ந்த கோள் என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர். பால் வீதிக்கு வெளியே கோள் கண்டுபிடிக்கப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.
இந்த கோள் பூமியிலிருந்து 2 ஆயிரம் ஒளிபரப்பு தூரத்துக்கு அப்பால் உள்ளது. இதற்கு எச்.பி. 13044 என்று பெயரிட்டுள்ளனர். இது நமது ஜுபிட்டர் கோளை விட 1.25 மடங்கு பெரிதாக இருக்கவேண்டும் என்று கருதுகின்றனர். இந்நிலையில் இந்த கோள் பற்றி விரிவான ஆய்வுகள் நடந்து வருகின்றன.

0 comments:

கருத்துரையிடுக