திங்கள், 27 டிசம்பர், 2010

தமுமுக 25 தொகுதிகளில் போட்டியிடும்-ஹைதர் அலி பேட்டி.

தென்காசி: தமிழக சட்டசபைத் தேர்தலில் 25 தொகுதிகளில் போட்டியிட முடிவு செய்திருப்பதாக தமிழக முஸ்லீம் முன்னேற்ற கழகம் தெரிவித்துள்ளது. தமுமுக பொது செயலாளர் ஹைதர் அலி தென்காசியில் நிருபர்களிடம் பேசுகையில்,  முக்கிய சுற்றுலா தலமான குற்றாலத்திற்கு செல்ல ரிங் ரோடு சரியாக இல்லை. தென்காசி மருத்துவமனையில் மருத்துவர்கள் நியமிக்க வேண்டும்.  தற்போது வக்பு வாரியத்தின் சார்பில் மருத்துவ கல்லூரி அமைக்க முன்வந்திருப்பதை வரவேற்கிறோம். தமிழகத்தில் நாங்கள் போட்டியிட வாய்ப்புள்ள தொகுதியாக 25 தொகுதிகளை கண்டறிந்துள்ளோம். அதில் கடையநல்லூர், பாளை தொகுதிகளும் அடங்கும். ஆனால் எத்தனை தொகுதி, எந்தெந்த தொகுதிகள் என்பது கூட்டணி தலைமைதான் முடிவு செய்யும் என்றார் அவர்.

0 comments:

கருத்துரையிடுக