புதன், 8 டிசம்பர், 2010

பெட்ரோல்-டீசல் விலை ரூ.2 உயரும்?

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்ததையடுத்து கடந்த ஜூன் மாதம் மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலைகளை உயர்த்தியது. அதன் பிறகு எண்ணை நிறுவனங்களே விலையை உயர்த்தி கொள்ள மத்திய அரசு அனுமதி அளித்தது. இதைத் தொடர்ந்து சர்வதேச சந்தையில் எண்ணெய் விலை உயரும் போதெல்லாம் பெட்ரோல், டீசல் விலையை நிறுவனங்கள் உயர்த்தி வருகின்றனர். இந் நிலையில் இப்போது கச்சா எண்ணெய் விலை மீண்டும் உயர்ந்து வருகிறது. ஒரு பேரல் கச்சா எண்ணெய் 90 அமெரிக்க டாலராகிவிட்டது. இதனால் பெட்ரோல், டீசல் விலையை லிட்டருக்கு ரூ.2 வரை உயர்த்த இந்திய எண்ணெய் நிறுவனங்கள் திதிட்டமிட்டுள்ளதாகத் தெரிகிறது. இந்த விலை உயர்வு அடுத்த வாரத்தில் அறிவிக்கப்படலாம்.
கடந்த ஜூன் மாதத்துக்கு பின் பெட்ரோல், டீசல் விலை 4 உயர்ந்துவிட்டது குறிப்பிடத்தக்கது. கச்சா விலை உயர்வால் இப்போது பெட்ரோல், டீசல் விலையை உயர்த்தாவிட்டால் இந்திய எண்ணெய் நிறுவனங்கள் இந்த நிதியாண்டில் நட்டும் ரூ.65,000 கோடி நஷ்டத்தை சந்திக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இவற்றின் விலை உயர்ந்தால் விலைவாசியும் உயர்ந்து நாட்டின் பணவீக்கமும் அதிகரிக்க வாய்ப்புள்ளது.

0 comments:

கருத்துரையிடுக