வெள்ளி, 10 டிசம்பர், 2010

நர்சிங் சேர்க்கை ஊழல்: போலீஸ் தீவிர விசாரணை.

தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புக்குத் தான் மாணவர்கள் போலிச் சான்றிதழ்கள் சமர்பித்தார்கள் என்று நினைக்கையில் தற்போது நர்சிங் மாணவர்களும் போலிச் சான்றிதழ்கள் அளித்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நர்சிங் மாணவர்கள் போலி +2 மதிப்பெண் சான்றிதழ்கள் கொடுத்துள்ளது தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக ஓய்வு பெற்ற தலைமை ஆசிரியர் உள்பட இருவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் சம்பத்தையும், அவரது உதவியாளர் சரவணனையும் நேற்று ஆரணி மற்றும் வேலூரில் வைத்து கைது செய்தோம். மேலும், அவர்களிடம் இருந்து போலி +2 மதிப்பெண் சான்றிதழ்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. அவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்துள்ளோம் என்று தெரிவித்தனர்.
கடந்த 2006-07, 2007-08 மற்றும் 2008-09 ஆண்டுகளில் சேர்ந்த நர்சிங் மாணவர்கள் போலிச் சான்றிதழ்கள் கொடுத்துள்ளனர். இதை கண்டுபிடித்த மெட்ராஸ் மெடிகல் காலேஜ் அதிகாரிகள் போலீசில் புகார் கொடுத்தனர். இதையடுத்து போலீசார் தனிப் படை அமைத்து இது குறித்து விசரணை நடத்தி வருகின்றனர்.

0 comments:

கருத்துரையிடுக