வெள்ளி, 10 டிசம்பர், 2010
குமரி மாவட்டத்தில் விடிய விடிய கனமழை.
குமரி மாவட்டத்தில் நேற்று இரவு முதல் இன்று காலை வரை விடிய விடிய மழை பெய்தது. இருப்பினும் மலை பகுதிகளில் மழை இல்லாதததால் அணைகளுக்கு வரும் நீரின் அளவு குறைந்தது. குமரி மாவட்டத்தில் கொட்டி தீர்த்த மழையால் மாவட்டமே வெள்ளக்காடானது. மலையோர பகுதிகளில் பெய்த மழையால் பேச்சிப்பாறை, பெருஞ்சாணி அணைகளுக்கு தண்ணீர் வரத்து அதிகரித்தது. இதற்கிடையே நேற்று மாவட்டம் முழு வதும் மழை குறைந்தது. குறிப்பாக அணை பகுதிகளில் மழை பெய்ய வில்லை. இதன் காரண மாக அணைகளில் இருந்து உபரி நீர் வெளியேற்றப்படுவது குறைக்கப்பட்டுள்ளது.
பேச்சிப்பாறை அணையில் தற்போது நீர்மட்டம் 46.05 அடியாக உள்ளது. அணைக்கு 1789 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்தது. அணையில் இருந்து 500 கன அடி தண்ணீர் மட்டுமே உபரியாக வெளியேற்றப்பட்டு வருகிறது. பெருஞ்சாணி நீர் மட்டம் 75.73 அடியாக உள்ளது. நேற்று முன் தினம் அணைக்கு 5655 கன அடி தண்ணீர் வந்து கொண்டிருந்த நிலையில் நேற்று 1782 கன அடியாக குறைந்தது. அணையில் இருந்து 931 கன அடி உபரியாக திறந்து விடப்பட்டு வருகிறது.
சிற்றார்&1 நீர்மட்டம் 16.53 அடியாகவும், சிற்றார்&2 நீர்மட்டம் 16.63 அடியாகவும் இருந்தது. அணைகளில் இருந்து நீர் வெளியேற்றப்படுவது நிறுத்தப்பட்டு உள்ளது. பொய்கை அணை நீர்மட்டம் 27.20 அடியாக உயர்ந்துள்ளது. மழை அளவே பொருத்தவரை அதிகபட்சமாக கொட்டாரத்தில் 24.6 மில்லி மீட்டர் மழை பதிவாகி இருக்கிறது. சுருளோடு, பூதப்பாண்டி, புத்தன் அணை, ஆரல்வாய்மொழி உள்ளிட்ட இடங்களில் மழை இல்லை. மற்ற இடங்களில் குறைந்த பட்ச அளவு மழை பதிவாகி இருக்கிறது.
இந்த நிலையில் நேற்று இரவு முதல் விடிய விடிய மாவட்டம் முழுவதும் மழை நீடித்தது. இந்த மழையால் பெரிய அள வில் பாதிப்பும் இல்லை. ஆறுகளில் தொடர்ந்து தண்ணீர் அதிகமாக செல்கிறது. குளங்கள், கால்வாய்களும் நிரம்பி உள்ளன. வெள்ளப்பெருக்கு காரணமாக குளங்களில் ஏற்பட்ட உடைப்புகளை சரி செய்யும் பணிகளில் பொதுப்பணித்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
0 comments:
கருத்துரையிடுக