வியாழன், 27 ஜனவரி, 2011
கடும் போராட்டங்களுக்குப்பின் அமெரிக்க நகரத்தில் மசூதி கட்ட நகராட்சி ஒப்புதல்
கலிபோர்னியாவில் உள்ள டெமிகுலா நகரில் மசூதி கட்ட இஸ்லாமியர்களுக்கு அனுமதி அளிப்பது என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. மாதக் கணக்காக மசூதி கட்ட பேச்சுவார்த்தை, போராட்டங்கள், மனுக்கள், கடிதங்கள் அனுப்பும் போராட்டங்கள் எல்லாம் நடத்திய பிறகு, தற்போது மசூதி கட்ட அனுமதிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மசூதி கட்ட அனுமதி அளிப்பது குறித்து நேற்று டெமிகுலா நகர கவுன்சில் கூட்டம் நேற்று நடந்தது. சுமார் 9 மணி நேரம் நடந்த இந்த கூட்டத்தில் மசூதி கட்ட நடத்தப்பட்ட வாக்கெடுப்பில் 4-0 என்று இத்திட்டத்திற்கு அங்கீகாரம் கிடைத்தது.
0 comments:
கருத்துரையிடுக