செவ்வாய், 15 பிப்ரவரி, 2011
காதலர் தினத்தை கண்டித்து தவ்ஹீத் ஜமாஅத் தெருமுனை பிரசாரம்
நாகர்கோவில், பிப்.15 தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி மாவட்ட தெங்கம்புதூர் கிளை சார்பில் காதலர் தினத்தை கற்புகொள்ளையர் தினம் என கண்டித்து தெருமுனை பிரசாரம் நடந்தது. இதில் மாநில பேச்சாளர் ஹாஜாநூஹ் பேசியதாவது:
ஒவ்வொரு ஆண்டும் பிப்ரவரி 14ம் தேதி என்றால் பெற்றோர்கள் கவலைப்படக்கூடிய தினமாகவும், இளைய தலைமுறையினருக்கு அரசு அங்கீகாரத்துடன் தவறு செய்ய வழிவகுக்கும் தினமாகவும் இருந்து வருகிறது. கலாச்சார பண்பாடு என்று இருந்த நம் நாடு இன்று ரோட்டோரங்களில் ஆபாசமாக நடக்ககூடிய அவல நிலையில் சென்று கொண்டிருகின்றது. இந்த தினத்தை தடை செய்ய வேண்டிய அரசாங்கம் அனுமதி அளித்து அங்கீகரிக்கிறது. எனவே அனைத்து சமுதாய மக்களும் காதலர் தினம் என்னும் இந்த தீமைக்கு எதிராக களம் காண வேண்டும். இவ் வாறு அவர் பேசினார்.
0 comments:
கருத்துரையிடுக