ஞாயிறு, 13 பிப்ரவரி, 2011
பெனாசிர் கொலை வழக்கு: பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப்புக்கு பிடிவாரண்டு
பெனாசிர் கொலை வழக்கில் பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷரப்புக்கு தீவிரவாத தடுப்பு கோர்ட்டு பிடிவாரண்டு பிறப்பித்து உத்தர விட்டுள்ளது. பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் பெனாசிர் பூட்டோ கடந்த 2007-ம் ஆண்டு படு கொலை செய்யப்பட்டார். ராவல்பிண்டியில் நடந்த தேர்தல் பிரசார பேரணியின்போது வெடிகுண்டுகளை வீசி தலிபான் தீவிரவாதிகள் அவரை கொலை செய்தனர். பாதுகாப்பு குறைபாடுகளே பெனாசிர் கொலைக்கு காரணம் என ஐ.நா.சபையின் விசாரணை குழு குற்றம் சாட்டியது.
தற்போது பெனாசிர் கொலை வழக்கு ராவல்பிண்டியில் உள்ள தீவிரவாதி தடுப்பு கோர்ட்டில் நடைபெற்று வருகிறது. பெனாசிர் கொலை செய்யப்பட்டபோது பாகிஸ்தான் அதிபராக முஷரப் பதவி வகித்தார். எனவே, இதில், அவருக்கும் தொடர்பு இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் அவரும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். அவர் மீது ராவல்பிண்டி கோர்ட்டில் இடைக்கால குற்றப்பத்தி ரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இதை தொடர்ந்து இன்று முஷரப் மீது ஜாமீனில் வர முடியாத பிடிவாரண்டு பிறப்பித்து கோர்ட்டு உத்தரவு பிறப்பித்துள்ளது. தற்போது அவர் லண்டனில் தங்கியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
0 comments:
கருத்துரையிடுக